டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*பஹல்காமில் “பாதுகாப்பு குறைபாடு” – அனைத்துக் கட்சி கூட்டத்தில் சூசகமாக சுட்டிக்காட்டிய ஒன்றிய அரசு; பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் உறுதி! கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தி இந்து:
* வக்ஃபு திருத்த மசோதா குறித்து கேரள வக்ஃபு வாரியம், கேரள மாநிலம் இரண்டின் கருத்தி னையும் நாடாளுமன்ற குழு முற்றிலுமாக நிராகரித்து விட்டது, என்று வாதிட்டு கேரள மாநில வக்ஃபு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
*பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஒன்றிய உளவுத்துறையின் தோல்வி என தேஜஸ்வி கண்டனம்; “பிரதமர் மோடி தனது கான்பூர் பயணத்தை ரத்து செய்தார், ஆனால் மாநிலத்தில் தேர்தல் இருப்பதால் பீகார் சென்றார்” எனவும் விமர்சனம்.
* கருநாடகாவின் ஜாதிவாரி சர்வேயால் குழப்பம்: அமைச்சரவையின் முன் விவாதத்திற்கு வரும் மாநிலத்தின் 10 ஆண்டுகால கணக்கெடுப்பு பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது – அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகங்கள் முதல் பரிந்துரைகளை ஆய்வு செய்யும் வல்லுநர்கள் வரை, ஜாதிவாரி சர்வேயின் உண்மைத்தன்மையை கேள்விக் குள்ளாக்குகின்றனர்,
– குடந்தை கருணா