இம்பால், ஜூலை 2 – மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதமாக கல வரம் நடந்து வருகிறது. மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச் சினைக்கு பொறுப்பேற்று பாஜவை சேர்ந்த முதலமைச்சர் பிரேன் பதவி விலகுவதாக தகவல் வெளியானது. 30.6.2023 அன்று பிற்பகல் முதல மைச்சர் பிரேன் சிங் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநரை சந்திக்க புறப்பட்டு சென்றார்.
ஆனால் அங்கே திரண்டு இருந்த பாஜவை சேர்ந்த பெண் தொண்டர்கள் முதலமைச்சர் கான்வாய் செல்வதற்கு அனுமதிக்க வில்லை. அவர் பதவி விலகக் கூடாது என்று முழக்கமிட்டனர்.
இதனால் முதலமைச்சர் பிரேன் சிங் திரும்பி சென்றார். இந்நிலை யில் முதலமைச்சர் தனது டிவிட் டர் பதிவில். ‘‘இந்த முக்கியமான தருணத்தில் நான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் முதல மைச்சரின் பதவி விலகல் கடிதம் கிழித்தெறியப்பட்டு கிடக்கும் ஒளிப் படம் சமூக வலை தளங்களில் வெளியானது.
முதலமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை ஆதரவாளர்கள் கிழித் தெறியும்படி வற்புறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.