கல்லக்குறிச்சி: அரியலூர் கிராமத்தில் நடைபெற்ற ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் நடத்தி வைத்தார்
அரியலூர், ஜூலை 2- கல்லக்குறிச்சி மாவட்டம், அரியலூர் கிராமத்தில் 29.06.2023 அன்று காலை 9.30 மணிக்கு ஆ.சிலம்பரசன்– வெ.மகாலட்சுமி இணையருக்கு ஜாதி மறுப்பு சுயமரியதை இணையேற்பு விழழவை கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் திருமண ஒப்பந்த உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித் தார். மாவட்டக் காப்பாளர் ம.சுப்பராயன் வரவேற்புரை ஆற்றினார்.
மாநில திராவிடர் மாணவர் கழக துணைச் செயலாளர் திராவிடப்புகழ், மாவட்ட கழக அமைப்பாளர் த.பெரிய சாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீர முரு கேசன், மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் பெ.எழி லரசன், ஆ.பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் கிளைக்கழகத் தலைவர் வே.கோதண்டபானி நிகழ்ச்சியை தொகுத்து அளித் தார். வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து கழகப் பேச்சாளர் இராம அன் பழகன் சிறப்புரை ஆற்றினார்.
இத்திருமணத்தில் மாவட்ட இளைஞரணித் தலைவர் அ. கரிகாலன், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் கே.முத்து வேல், ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் அர.சண்முகம், உளுந்தூர்பேட்டை ஒன்றிய தலைவர் செல்வ சக்திவேல், ச.அறிவரசன், திருக்கோவிலூர் ஒன்றிய கழகச் செயலாளர் மு.இளங்கோவன், மூங்கில் துறைப்பட்டு நகர தலைவர் நூ.சலீம், அவரின் இணையர் சுல்தானா, சங்கராபுரம் ஒன் றிய திராவிடர் மாணவர்கழக அமைப்பாளர் மா.ஏழுமலை, அவரின் இணையர் ஜெயலட் சுமி, மூரார்பாளையம் கிளைக் கழக தலைவர் இரா.செல்வ மணி, மணலூர்பேட்டை நகர கழகத் தலைவர் சி.அய்யனார்; செயலாளர் பா.சக்தி.ஜம்பை கிளைக் கழகச் செயலாளர் வை.சேகர், அரியலூர் கிராம திராவிடர் மாணவர் கழகத் தலைவர் கோகுல், அரியலூர் கிளைக்கழக மகளிரணி அமைப் பாளர் சத்யா கோதண்டபானி, கோ.தமிழ், சங்கராபுரம் நகர கழகச் செயலாளர் அப்துல் கபூர், நாகல்குடி இராமச்சந் திரன், திருமலா பால் நிர்வாகி சிவானந்தன், மூரார்பாளையம் தர்மன், ஊராங்கனி பெரியார் பற்;றாளர்கள் வெங்கடேசன் – மாரி இணையர், மணமக்களின் உற்றார் உறவினர்கள் நண் பர்கள், உள்பட நானூருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுயமரியாதைத் திருமணம் முன்னிட்டு அரிய லூர் கிராமமெங்கும் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர்களின் உருவம் பதித்த பதாதைகளும், கழகக் கொடிகளும் ஒளிவீசித் திகழ்ந்தன. அனைவருக்கும் சுவையான அசைவ உணவு பரிமாறப்பட்டது. இறுதியில் கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் மாணவர் கழக அமைப் பாளர் திராவிட சசி நன்றி கூறினார்.
நன்கொடை
மணமகன் ஆ.சிலம்பரசன் விடுதலை வளர்ச்சி நிதிக்காக ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.