2.7.2023
இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டின் பிணை மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்து, “உடனடி யாக சரணடைய வேண்டும்” என்று கூறிய சில மணி நேரங்களுக்கு பிறகு, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதி கள் கொண்ட அமர்வு 1.7.2023 அன்று இரவு அவருக்கு இடைக்கால பாதுகாப்பு அளித்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉பொது சிவில் சட்டத்தின் முன்மொழிவு என்ன, எந்தெந்த விடயங்களில் அவர் சீரான தன்மையை விரும்புகிறார் என்பதை பிரதமர் மோடி முதலில் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மூத்த வழக்கு ரைஞர் கபில் சிபில் கூறியுள்ளார்.
தி இந்து
👉 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும். மணிப்பூர் வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதங்களை எழுப்ப திட்டம்.
👉 மாவட்டங்கள், தாலுகாக்கள் மற்றும் நகரங்களின் நிர்வாக எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான காலக் கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 2024 பொதுத் தேர்தலுக்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் சாத்தியம் இல்லை.
தி டெலிகிராப்
👉பொது சிவில் சட்டத்தை ஜார்க்கண்ட் பழங்குடியினர் அமைப்பு எதிர்ப்பு. அரசமைப்பின் அய்ந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணை நீர்த்துப்போகும் என குற்றச்சாட்டு.
👉 குடியரசுத் தலைவராக அனைத்து வகையான தகவல்களையும் கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. மணிப்பூரில் கொலை, கொள்ளை மற்றும் எரிப்புக் களத்தை முடிவுக்குக் கொண்டு வர அவர் துல்லியமாக என்ன செய்தார் என்று நீங்கள் மோடியை அழைத்து கேட்கலாம். உண்மையில், அவர் மேற் கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது என மூத்த பத்திரிக்கையாளர் ஏ.ஜே.பிலிப் குடியரசுத் தலைவருக்கு பகிரங்கக் கடிதம்.
👉வடகிழக்கு மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் பொது சிவில் சட்டம், கலாச்சார ரீதியாக வேறுபட்ட பழங்குடியினர் வசிக்கும் பிராந்தியத்தில் சுதந்திரம் மற்றும் உரிமைகளை கட்டுப்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி எதிர்ப்பு.
– குடந்தை கருணா