சென்னை, ஏப்.23 வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் தொடர்ச் சியாக நடத்தப்படும் என த.மு.மு.க. அறிவித்தது. அதன்படி, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் த.மு.மு.க. தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தலைமையில் நேற்று (22.4.2025) நடந்தது.
முன்னதாக ராஜாஜி சாலை –- இந்தியன் வங்கி சிக்னல் அருகே இருந்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.