இன்று (23.4.2025) உலக புத்தக தினத்தை முன்னிட்டு தாம்பரம் பெரியார் புத்தக நிலையத்தில் 50% சதவீத தள்ளுபடி விற்பனை தொடங்கியது தொடக்கி வைத்தவர்கள் சோளிங்கநல்லூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன் அவர்கள் வாழ்வியல் சிந்தனை 18 புத்தகங்கள் கொண்ட தொகுப்பு ரூபாய் 2500 செலுத்திப் பெற்றுக் கொண்டார் மற்றும் தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் அவர்கள் உலகத் தலைவர் பெரியார் 10 புத்தகங்கள் தொகுப்பு ரூபாய் 2000 செலுத்தி பெற்றுக் கொண்டார் 50% கழிவு பெற்று கூடுவாஞ்சேரி மா.இராசு அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். மாவட்ட தலைவர் ப.முத்தையன் அவர்கள் புத்தகங்கள் வழங்கி சிறப்புச் செய்தார்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்து மகிழ்ந்தனர்.