கும்முடிப்பூண்டி, ஏப். 23- கும்முடிப்பூண்டி கழக மாவட்டம், புழல் ஒன்றிய பகுதி காவாங்கரையில் புரட்சியாளர் டாக்டர் பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப.சக்ரவர்த்தி வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பேசிய பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஓவியர் ஜனாதிபதி அம்பேத்கர் அவர்களை எப்படி உள்வாங்கவேண்டும் என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் தமிழிச்செல்வன் மற்றும் த.வா.க வட்ட கழக செயலாளர் அனிதா பேசிய பிறகு வாழ்த்துரை வழங்கிய கழகத்தின் மாநில ஒருங் கிணைப்பாளர் வி. பன்னீர் செல்வம் புரட்சியாளர் அம்பேத்காருக்கும், அறிவுலக ஆசான் தந்தை பெரியாருக்கும் உள்ள நெருக்கமான உறவைப் பற்றி பேசினார் இறுதியாக வாழ்த்துரை வழங்கிய கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை பற்றி பல்வேறு புதிய தகவல்களை தன் பேச்சால் திறம்பட எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெ. பாஸ்கரன், புழல் ஒன்றிய தலைவர் செகத் விஜயகுமார், புழல் ஒன்றிய செயலாளர் வடகரை உதயகுமார், மாவட்ட கழக துணை செயலாளர் க.ச.க.இரணியன், பொதுக்குழு உறுப்பினர் ந. கஜேந்திரன், பொன்னேரி நகர தலைவர் பொன்னேரி வே. அருள், பொன்னேரி நகர செயலாளர் சுதாகர், மீஞ்சூர் ஒன்றிய தலைவர் ஏலியம்பேடு கெ. முருகன், பொன்னேரி வினோத், மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியப்பாளையம் அ. ஆகாஷ், கலைவேந்தன், மாவட்ட மகளிரணி செயலாளர் ச. நதியா ஆகியோரும் மற்றும் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.