கள்ளிப்பட்டியில் கொள்கைக் குடும்பங்களின் சந்திப்புக் கூட்டம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கள்ளிப்பட்டி, ஏப். 22- தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் கள்ளிப்பட்டியில் கொள்கை குடும்பங்களின் சந்திப்புக்கூட்டம் 20.4.2025 ஞாயிறு காலை 11 மணிக்கு மாவட்ட துணைச்செயலாளர் லோ.முத்துச்சாமி இல்லத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது.

நிகழ்விற்கு மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ் தலைமை வகித்தார். கழக பேச்சாளர் ஆண்டிப்பட்டி கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன்  ஆகியோர் கழகத்தின்செயல்பாடுகளை விளக்கி கருத்துரையாற்றினார்கள்.

திராவிடர் கழக கிளைக் கழகத்திற்கும், ஒன்றிய மகளிரணிக்கும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக் கப்பட்டார்கள்.

கழக கொள்கை விளக்க தெரு முனை கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

சிலம்பு விளையாட்டில் விருதுகளை குவித்து வரும் பெரியார் பிஞ்சு மு.உமேசுலட்சியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அமைப்பாளர் பால். ஆதிதமிழன், முத்துச்செல்வம், ஆ.ஆகாஷ்ராஜ், மு. சரவணன், எஸ்.சுகந்தி புஷ்பராணி, பி.முரு கேஸ்வரி, லோ. முருகமுத்து, சு. பெரியார் வளவன், பா.பால்பாண்டி, பி.கபிலன், எம்.கே.செயராமன்,  அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளர் சுசி. மணிவாசகம் (விசிக), எம்.கே..ஜெயராமன், விசிக மாநில துணை அமைப்பாளர் ராவண பரதன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தார்கள்.

கள்ளிப்பட்டி கிளைக்
கழக புதிய பொறுப்பாளர்கள்

தலைவர்: பா.பால்பாண்டி செயலாளர்:சி.முத்துச்செல்வம், துணைத் தலைவர்: முத்து லிங்கம்,

ஒன்றிய கழக மகளிரணி புதிய பொறுப்பாளர்கள்

தலைவர்:பி.முருகேசுவரி, செயலாளர்:சுகந்திராணி

கழக கொள்கை விளக்கக் கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. நண்பகல் ஒரு மணிக்கு போடி ஒன்றியம் டொம்புச்சேரியில் கொள்கை குடும்பங்களின் சந்திப்புக் கூட்டம் ஒன்றிய செயலாளர் ச.சென்றாயன் இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் தேனி மணிகண்டன் தலைமை வகித்தார்.

மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ், மாவட்ட துணைச் செயலாளர் லோ.முத்துச்சாமி, கழக பேச்சாளர் ஆண்டிப்பட்டி கண்ணன், சிபிஎம் – மணிமாறன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

புதிய பொறுப்பாளர்கள்

ஒன்றிய கழக மகளிரணி செயலா ளர்-ச.ஜனனி, ஒன்றிய மாணவர் கழக செயலாளர்-

கு.தர்ஷினி, கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இரண்டு நிகழ்வுகளிலும் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியாரால் தமிழ் சமூகம் பெற்றிருக்கும் உரிமைகளையும், மூடநம்பிக்கைகளில் நம்மை மூழ்கச்செய்யும் பார்ப்பன சூழ்ச்சிகளை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அரும்பெரும்பணிகளை விளக்கியும், கழக இலட்சிய ஏடுகளான விடுதலை,உண்மை,பெரியார் பிஞ்சு,மாடர்ன்ரேசனலிஸ்ட் ஆகிய இதழ்களை வாசிக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கி உரையாற்றினார்.

ஒன்றிய செயலாளர் ச.சென் றாயன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *