மதுரை, ஏப்.22 மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தள பதிவில், ‘‘பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம். வந்தே பாரத் ரயிலின் முன்புற கோச், சாதாரண ரயில்களை விட எடை குறைவு என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கையில் கூறியுள்ளார். வந்தே பாரத்துக்கு காவி நிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே’’ என கூறியுள்ளார். மற்றொரு பதிவில், ‘‘தெற்கு ரயில்வேயின் தலைமையகத்தில் இந்தி சொற்களையே 3 மொழிகளிலும் எழுதி வைத்துள்ளனர். சமீபத்தில் என்சிஇஆர்டி பாட புத்தகத்திலும் ஹிந்தி சொற்களையே ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர். பாட புத்தகம் துவங்கி ரயில் நிலையம் வரை ஹிந்தியை மற்ற மொழிகளின் வழியாகவும் திணிக்கத் துவங்கியுள்ளனர். எந்த மொழியில் படித்தாலும் ஹிந்தி படிக்க வேண்டும் என்பது நம் மீது மோடியின் அடுத்த கசையடி’’ என்று கூறியுள்ளார்.
வந்தே பாரத் ரயிலுக்கு காவி அடிப்பதில் காட்டும் ஆர்வத்தை பாதுகாப்பிலும் காட்டுங்கள் மதுரை எம்.பி. பதிவு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books