குற்றாலத்தில் வள்ளல் வீகேயென் மாளிகையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக கலந்துரையாடல் – புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

குற்றாலம், ஜூலை 3 – கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் 30.6.2023 அன்று மாலை 6 மணிக்கு வள்ளல் வீகேயென் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்றார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முன்னிலை வகித்தார். மாநில மாணவர் கழக துணை செயலாளர் க.இனியன் கடவுள் மறுப்பு கூறினார். தென்காசி மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன் வரவேற்று உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தொடக்க உரையாற்றினார். கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ச.இராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, மாவட்ட செயலாளர் கோ.முருகன், காப்பாளர்கள் ம.தயாளன், திருநெல்வேலி இரா.காசி, தூத்துக்குடி சு.காசிராசன், மா.பால் ராசேந்திரம், சி.டேவிட் செல்லத்துரை, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கே.டி.சி.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன், சி.கிருஸ்ணேஸ்வரி, கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், பொரு ளாளர் வீ.குமரேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சவுந்தர பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்தார். தோழர் கள் கரவொலி எழுப்பி வழிமொழிந்தார்கள்.

நிறைவாக தமிழர் தலைவர் கழகம் வென்ற போர்க் களங்கள், கழகத் தோழர்களின் தனிச் சிறப்புகள், எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் ஆகியவற்றை விளக்கி சிறப்புரையாற்றினார். இறுதியில் வீரவநல்லூர் கழகத் தலைவர் கருணாநிதி நன்றி கூறினார்.

புதிய பொறுப்பாளர்கள்

தென்காசி மாவட்டம்

காப்பாளர்: சீ.டேவிட் செல்லத்துரை

மாவட்டத் தலைவர்: வழக்குரைஞர் த.வீரன், செயலாளர்: வே.முருகன்

துணைத் தலைவர்: ம.செந்தில்குமார், துணைச் செயலாளர்: இல.அன்பழகன்

மாவட்ட இளைஞரணி தலைவர்: சு.கோபால், செயலாளர்: பா.சங்கர்

மாவட்ட மாணவர் கழகத் தலைவர்: மஅமுதன், செயலாளர்: கே.கோமதி, அமைப்பளர்: செங்கதிர் வள்ளுவன்

மாவட்ட மகளிரணித் தலைவர்: த.பாக்யலட்சுமி, செயலாளர்: பா.வடகாசி

மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்: இரா.தங்கம், செயலாளர்: ராமலட்சுமி

கீழப்பாவூர் நகரத் தலைவர்: மு.இராமசாமி, செயலாளர்: மு.சிவப்பிரகாசம்

சங்கரன்கோவில் நகரத் தலைவர்: வழக்குரைஞர் து.சண்முகையா, செயலாளர் மோகன்

இராயகிரி நகரத் தலைவர்: வெ.இராக்குமார்

மேலமெஞ்ஞானபுரம் தலைவர்: மருத்துவர் டே.அன்பரசன், 

ஆலங்குளம் நகரத் தலைவர்: ஆ.ஞானராஜ், செயலாளர்: இளங்கோவன்

கடையநல்லூர் ஒன்றியத் தலைவர்: கை.சண்மும்

கீழப்பாவூர் ப.க. தலைவர்: எல்.ஆர்.பால்துரை, செயலாளர்: வே.குசலவராசன்

பொதுக்குழு உறுப்பினர்கள்: கீழப்பாவூர் அய்.ராமச்சந்திரன், பி.பொன்ராஜ்

தூத்துக்குடி மாவட்டம்

காப்பாளர்கள்: மா.பால்ராசேந்திரம், சு.காசி

மாவட்டத் தலைவர்: மு.முனியசாமி, செயலாளர்: கோ.முருகன்

துணைத் தலைவர்: இரா.ஆழ்வார், துணைச் செயலாளர்: சி.மணிமொழியன்

மாவட்ட இளைஞரணித் தலைவர்: தி.இல.கார்த்தி கேயன், செயலாளர்: செ.நவீன்குமார், அமைப்பாளர்: த.பிரிதிவிராஜன்

மாவட்ட மாணவர் கழகத் தலைவர்: மா.தெய்வப் பிரியா, செயலாளர்: செ.வள்ளி, அமைப்பாளர்: இளஞ்செழியன்

மாநகரத் தலைவர்: த.பெரியார்தாசன், செயலாளர்: செ.செல்லத்துரை

மாவட்ட ப.க. தலைவர்: ச.வெங்கட்ராமன், செயலா ளர்: சொ.பொன்ராஜ்

மாநகர ப.க. தலைவர்: அ.மதிவாணன், செயலாளர்: ச.புத்தன்

மாவட்டத் தொழிலாளரணி அமைப்பாளர்: த.நாகராஜன்

மாநகர மாணவர் கழகத் தலைவர்: இ.ஞா.திரவியம், செயலாளர்: ஆ.கலைமணி

விளாத்திக்குளம் ஒன்றியத் தலைவர்: மு.பாலருமுகன்

புதூர் ஒன்றியத் தலைவர்: வெ.பாலமுருகன்

திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர்: ரெ.சேகர்

திருவைகுண்டம் ஒன்றியத் தலைவர்: சு.திருமலைக் குமரேசன்

கோவில்பட்டி ஒன்றியத் தலைவர்: செ.ஜெயா

குலசேகரபட்டினம் நகரத் தலைவர்: ஆ.கந்தசாமி

நெல்லை மாவட்டம் 

வள்ளியூர்

நகரத் தலைவர்: செ.ரமேஷ், நகரச் செயலாளர்: நம்பிராஜன்

வீரவநல்லூர்

நகரத் தலைவர்: கருணாநிதி, நகரச் செயலாளர்: மு.தமிழ்ச்செல்வன்

தென்கலம்

நகரத் தலைவர்: வா.அய்யப்பன், நகரச் செயலாளர்: வெள்ளத்துரை

அம்பாசமுத்திரம்

ஒன்றிய தலைவர்: கோ.செல்வ சுந்தரசேகர்

பகுத்தறிவாளர் கழகம் – வள்ளியூர்

தலைவர்: ந.குணசீலன், செயலாளர்: சத்தியன்

துணைத் தலைவர்: வெள்ளபாண்டி, துணைச் செயலாளர்: மோகனசுந்தரம்

கன்னியாகுமரி மாவட்டம் 

காப்பாளர்கள் சி.கிருஸ்ணேஸ்வரி, ஞா. பிரான்சிஸ் 

மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம்

மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் 

மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்லபெருமாள் 

மாவட்ட துணைச்செயலாளர் கவிஞர் செய்க்அகமது

பொதுக்குழு உறுப்பினர்கள் ம.தயாளன், மா.மணி 

நாகர்கோவில் மாநகரம் தலைவர் ச .கருணாநிதி செயலாளர் மு.இராசசேகர்

தோவாளை ஒன்றியம் தலைவர் மா. ஆறுமுகம் செயலாளர் ந .தமிழரசன் 

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆரல் ம. தமிழ்மதி 

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் அமைப்பாளர் குமாரதாஸ் 

குருந்தன்கோடு ஒன்றியம்: தலைவர் ஆ.சிவக்குமார், செயலாளர் செல்லையா 

ராஜாக்க மங்கலம் ஒன்றியம் அமைப்பாளர் நீலகண்டன் (எ) ரவி 

தக்கலை ஒன்றியம் : தலைவர் இரா.இராஜீவ்லால், செயலாளர் சி. இளங்கோ 

திருவட்டாறு ஒன்றியம் அமைப்பாளர் த.டார்ஜன் 

மூஞ்சிறை ஒன்றியம் அமைப்பாளர் சீனிவாசன் 

கிள்ளியூர் ஒன்றியம் அமைப்பாளர் தே. சாம்பிராஜ் 

பத்மநாபபுரம் நகரம் அமைப்பாளர்எஸ். கே. அகமது 

குழித்துறை நகரம் அமைப்பாளர் ஜெய்சங்கர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *