திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நேற்று (20.4.2025) ஒசூருக்கு வருகை தந்தார். தமிழ் நாடு அரசு சார்பில் ஒசூர் மாநகராட்சி அதிகாரிகளால் ஜனவரி 21ஆம் தேதி உள்வட்ட சாலையில் தந்தை பெரியார் சதுக்கம் பெயர்ப் பலகை நிறுவப்பட்டது. அதை பார்வையிட்ட கழகத் துணைத் தலைவர் அங்கு வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், செயலாளர் மா.சின்னசாமி,துணைச் செயலாளர் ச.எழிலன்,பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.கண்மணி,அ.செ.செல்வம், மகளிரணி மாவட்ட தலைவர் செல்வி, மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் கிருபா, தொழிலாளர் அணி மேனாள் மாவட்ட செயலாளர் தி.பாலகிருஷ்ணன்,கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கோ.திராவிடமணி, சேலம் மாவட்ட தலைவர் வீரமணிராஜு, கலைமணி, திமுக வட்ட செயலாளர் ஆறுமுகம், தொமுச தாமோதரன், தி.மு.க.மகளிரணி ராணி, ராதாகிருஷ்ணன், கிஷோர், வழக்குரைஞர் வெற்றி, திராவிட மாணவர் கழகம் மாவட்ட தலைவர் செந்தமிழ், பகுத்தறிவு செயலாளர் சித்தாந்தன்,வாசு,விசு, பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட செயலாளர் செ.பேரரசன், துணைத்தலைவர் ரரமேஷ்வரன்மற்றும் பலர் கலந்துகொண்டனர்.