சென்னை, ஏப்.21 தமிழ்நாட்டில் நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்பது தொடர்பாக இன்று (21.4.2025) கூடிய சட்டப்பேரவை நிகழ்வின்போது அதிமுக – திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
அப்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘நீட் தேர்வை ரத்து செய்தால் தான் (பாஜக) கூட்டணியில் இருப்போம் என்று கூற உங்களுக்குத் ‘தகுதி’ இருக்கிறதா?’’ என்று இபிஎஸ்-அய் நோக்கி கேள்வி எழுப்பினார்.
தவறை சரி செய்வதற்கு உங்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.