நாள்தோறும் மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
பகல் உறக்கம் கூடாது. தவிர்க்க முடியாவிட்டால் 30 நிமிடங்கள் தூக்கம் மட்டும் போதும்.
இரவு 8 மணிக்கு மேல் காபி, டீ அருந்தக் கூடாது.
மது அருந்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது.
படுக்கைக்கு செல்லும் முன்பு வெந்நீரில் குளித்து விட்டு லேசான சூட்டுடன் பால் அருந்தினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்ல வேண்டும்.
படுக்கை அறை சற்று மங்கிய வெளிச்சத்தில் இருக்க வேண்டும்.
படுக்கை அறையில் படுத்துக்கொண்டு தொலைக் காட்சி பார்க்கக் கூடாது. புத்தகம் படிப்பதையும், வானொலி கேட்பதையும் தவிர்க்க வேண்டும்.
மன உளைச்சலையும், கவலைகளையும் புறந்தள்ளிவிட வேண்டும். அதைத் தவிர்க்க 30 நிமிடம் அமைதியாக அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்திவிட்டு படுக்கைக்கு சென்றால் ஆழ்ந்த உறக்கம் நிச்சயம்.
சிறுநீரகக் கற்களால் ஆண்டுக்கு
5 லட்சம் பேர் பாதிப்பு
ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் சிறு நீரகக் கற்கள் ஏற்படுவதால் பாதிக்கப்படுகின்றனர். பத்து பேரில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் சிறு நீரகக் கற்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயால் அதிக அளவில் பாதிப்படைபவர்கள் ஆண்களே 11 சதவீதம் ஆண்கள் பாதிக்கப்பட்டால் 8 சதவீதமே பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மிகு இரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பருத்த உடல் ஆகியவற்றால் இந்நோய் எளிதில் வரக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.