நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் – ஜூலை 20இல் தொடங்கும்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 3 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ஆ-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் மிக பிரம் மாண்ட மாக கட்டப்பட்ட புதிய நாடாளு மன்ற கட்டடத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் 28ஆ-ம் தேதி திறந்து வைத்தார். மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு நடை பெற்றால், உறுப்பினர்களின் எண் ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப அதிக எண்ணிக்கையில் இருக்கைகளுடன் நாடாளுமன்ற கட்டடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (1.7.2023) அறிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2023, ஜூலை 20ஆ-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தக் கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத் துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள் ளார். இதுகுறித்து நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறும்போது, ‘‘மழைக்கால கூட்டத் தொடர், பழைய நாடாளுமன்ற கட்டடத் திலேயே முதலில் தொடங்கும். சில அமர்வுகளுக்குப் பிறகு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட் டத் தொடர் தொடரும். அப்படி நடைபெற்றால், புதிய கட்டடம் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடராக அது அமையும். இந்த கூட்டத் தொடரில் சுமார் 17 அமர்வுகள் இருக்கும்’’ என்று தெரிவித்தன. மழைக்கால கூட்டத் தொடரின் போது முக்கியமாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், பணி நியமனம், பணி மாற்றம் போன்ற விவகாரங்களில் தலைநகர் டில்லி நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  டில்லியில் கொண்டு வரப்பட்ட இந்த அவசர சட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி அரசுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித் துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், பொது சிவில் சட்டத்தை கொள்கை ரீதியாக ஆதரிக்கிறோம் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.  

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், இந்த மழைக்கால கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒன்றிய பாஜக தலை மையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க் கட்சித் தலைவர்கள் திட்டமிட் டுள்ளனர். குறிப்பாக பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வரப் பட்டால், அதை கடுமையாக எதிர்க்க பல்வேறு தலைவர்கள் தயாராக இருப்பதாக கூறப்படு கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *