பீகாரில் 5 வயது மகனின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கூலித் தொழிலாளி
சமஸ்திபூர், ஏப். 20
பீகார் மாநிலத்தில் அய்க்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினை, அய்க்கிய ஜனதா தளம் – பாஜக கட்சிகளுக்கு இடை யேயான அதிகார மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளை சமாளிக்கவே ஆளும் கூட்டணிக் கட்சியின் முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள், அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் போது மானதாக இருக்கிறது. இதனால் பீகார் மக்கள் அடிப் படை வசதிகள் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சமஸ்திபூர் அருகே கூலித் தொழி லாளியின் 5 வயது மகன் உடல்நலக்குறைவால் அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மகனின் உடலை தனது கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கேட்டு சமஸ்திபூர் மாவட்ட மருத்துவ மனை நிர்வாகத்திடம் துக்க நேரத்திலும் கூலித் தொழிலாளி போராடியுள்ளார். ஆனால் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க மறுத்துவிட்டது. கூலித் தொழி லாளியிடம் தனியார் ஆம்புலன்ஸ் வச தியை ஏற்பாடு செய்ய பண வசதி இல்லை. இதனால் உறவினரின் இருசக்கர வாகனத்தின் மூலம் தனது 5 வயது மகனை தனது சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளார் கூலித் தொழி லாளி. இந்த நிகழ்வு சமூகவலைத் தளங்களில் கண்டனத்துடன் வைரலாகி வருகிறது.
உலகில் முதல் முறையாக அரை மாரத்தானில் ஓடிய மனித உருவ ரோபோக்கள் : சீனா சாதனை
பீஜிங், ஏப்.20 உலகில் முதல் முறையாக மனிதர்களுடன் இணைந்து மனித உருவ ரோபோக்கள் பங்கேற்ற அரை மாரத்தான் ஓட்டத்தை நடத்தி சீனா சாதனை படைத்துள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த 21 கிமீ அரை மாரத்தான் ஓட்டப் போட்டியில் முதல் முறையாக மனிதர்களுக்கு இணையாக மனித ரோபோக்களும் இடம் பெற்றன. பல்வேறு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் தயாரித்த 21 மனித உருவ ரோபோக்கள் இதில் பங்கேற்றன. இந்த ரோபோக்கள் வெவ்வேறு வடிவங்களுடனும், அளவுகளிலும் இருந்தன. ஒரு சில ரோபோக்கள் ஆரம்பத்திலேயே தொழில் நுட்பக் கோளாறால் நின்றாலும் பெரும் பாலானவை மனிதர்களை போலவே ஓடின. இது பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்தது.
ரோபோக்களுக்கான தனிப் பாதையில் அவைகளின் பேட்டரிகளை மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எத்தியோப்பியா வீரர் எலியாஸ் டெஸ்டா 1 மணி நேரம் 2 நிமிடங்களில் போட்டி தூரத்தை எட்டி முதலிடம் பெற்ற நிலையில், டியான்காங் அணியை சேர்ந்த டியான்காங் அல்ட்ரா ரோபோ 2 மணி நேரம் 40 மணி நேரம் ஓடி வெற்றி பெற்றது. வேகத்திற்காக மட்டுமின்றி, சிறந்த நடை வடிவமைப்பு, புதுமையான வடிவம் போன்ற பல பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன. ஏஅய் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் சீனா போட்டி போடும் நிலையில் இந்த ரோபோ மாரத்தான் பந்தயம் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எப்படி இருக்கிறது?
உச்ச நீதிமன்றம் அண்மையில் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் மாநிலங்கள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்ெகடு நிர்ணயித்தது.
இது குறித்து குடியரசு துணை தலைவர் தனது அதிருப்தியை தெரிவித்தார். குடியரசு துணை தலைவரின் தேவையற்ற விமர்சனங்களை எதிர்த்து நாடெங்கும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இப்பொழுது பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றால் நாடாளுமன்றத்தையே மூடிவிடலாம் என்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். எப்படி இருக்கிறது!!