பிரஸ்ஸல்ஸ், ஏப்.20 அய்ரோப்பா முழுவதிலும் உள்ள சுகாதார நிலையங்கள் அதிக நேரம் இயங்குவதாக தொழிற்சங்கங்கள் சேகரித்த தரவுகளின்படி தெரிய வந்துள்ளது. இதனால் அய்ரோப்பிய நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது, பட்ஜெட்களில் பணத்தை வெட்டுவது, மோசமான அரசியல் சூழல் காரணமாக இந்த பிரச்சினை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோச மான நிலையின் காரணமாக கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வேலை நேரத்தை விட அதிக நேரம் வேலை செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
கரோனா தொற்று காலத்திற்கு பிறகு இந்த நிலை மேலும் மோசமாகி உள்ளது. நீண்ட காலமாக உள்ள சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை, குறைந்த ஊதியம் மற்றும் மோச மான வேலை திட்டமிடல் ஆகியவை சுகாதார மற்றும் பராமரிப்புப் பணியாளர்களை குறிப்பாக செவிலியர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளியுள்ளது. வேலைப்பளுவால் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள அவர்கள் ஓய்வு நேரத்தைக் கூட ரத்துசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இத்தகைய நிலைமைகள் தற்செயலானது அல்ல –- சிக்கனம் என்ற பெயரில் அரசாங்கங்கள் சுகாதார அமைப்பு களில் எடுக்கும் முடிவுகளே காரணம் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இந்த அதிக நேரப் பணி என்பது பெரும் பான்மையான அய்ரோப்பிய நாடுகளிலும் நிலவுகின்றது.