இந்தியா-அமெரிக்கா இணைந்து தயாரித்த தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும்! – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

2 Min Read

நாகர்கோவில்,ஏப்.20– இந்தியா-அமெரிக்கா சேர்ந்து இணைந்து தொலை தொடர்பு செயற்கைகோள் மார்க் -3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் நாராயணன், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
இஸ்ரோவில் 2025இல் நிறைய சாதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை வைத்து இயங்கும் மார்க்-3 ராக்கெட்டை நிலவுக்கு அனுப்பும் திட்டம் இருக்கிறது. அதன் மூலம் மார்க் -3 ராக்கெட் 4000 கிலோ எடையுள்ள செயற்கைகோளை ஆர்பிட்டுக்கு கொண்டு செல்ல முடியும்.

சுனிதா வில்லியம்சுக்கு ஏற்பட்ட சிக்கலை நாம் படித்து வருகிறோம். வரும் மே மாதம் பி.எஸ்.எல்.வி 61ஆவது ராக்கெட்டை அனுப்ப இருக்கிறோம். மேலும் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து செய்த தொலை தொடர்பு செயற்கைகோளை மார்க் -3 மூலம் ஜூலை மாதம் விண்ணில் அனுப்ப உள்ளோம். மகேந்திரகிரியில் நிறைய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்பு இஸ்ரோ மட்டுமே இந்திய விண்வெளிக்கான எல்லா வேலைகளையும் செய்து வந்தது.

இப்போது ராக்கெட் தயாரித்தல், சாப்ட்வேர் உருவாக்குதல் போன்றவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, இளைஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு இஸ்ரோ தேவையான உதவிகளை செய்து, ஊக்குவிக்குவித்து வருகிறது.

கன்னியாகுமரி சன் செட் பாயின்ட் அருகே விண்வெளி பூங்கா அமைக்க உள்ளோம். அதற்கான நிலம் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து இருக்கிறது. குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 95 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்கு புறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் ராக்கெட் இன்ஜின்
இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில், ‘நம்மிடம் திரவ ராக்கெட் இன்ஜினில் பெரிய திறன் இன்ஜின் என்பது விகாஷ் இன்ஜின் ஆகும். இப்போது திரவ ஆக்சிஜனையும், மண்ணெண்ணெய்யையும் வைத்து 200 டன் திறன் உள்ள செமிக்ரோ இன்ஜினை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக மகேந்திரகிரியில் ரூ.1000 கோடி மதிப்பில் சோதனை கூடம் ஒன்றை பிரதமர் மோடி கடந்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிதாக உருவாக்கம் செய்த இன்ஜின் பவர் ஹெட் வெற்றிகரமாக செய்து இருக்கிறோம். இது பெரிய சாதனையாகும். அதில் சில சோதனைகள் முடிக்கப்பட வேண்டி உள்ளன’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *