கூட்டுறவு வங்கிகளில் வேலை வேண்டும் என்பவர்கள், கூட்டுறவு படிப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
அந்தவகையில், 2024-2025ஆம் ஆண்டு 24ஆவது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி படிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025ஆம் ஆண்டு 24ஆவது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (Diploma in Cooperative Management) தொடங்கப்படவுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில் / சங்கங்களில் முறையான பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் மட்டுமே பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: 01.05.2025 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .
விண்ணப்பங்கள் Online மூலம் www.tncu.gov.tn.in என்ற இணையதள முகவரியில் 6.05.2025 அன்று மாலை 5.30 வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் ஒளிப்படம் பதிவேற்றம் (Upload) செய்யவேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.05.2025 பிற்பகல் 5.30 மணி வரை மட்டும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்திருந்தால் அவ்விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-.
பயிற்சிக்கான பயிற்சிக் கட்டணம்: ரூ.20750/-
பயிற்சி காலம்: ஓராண்டு 2 பருவமுறைகள். புதிய பாடத்திட்டத்தின் படி தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
தேர்வுகள் தமிழில் மட்டுமே கொள்குறி வினா அடிப்படையில் (Objective Type) நடத்தப்படும்.
பயிற்சி தொடங்கும் நாள்: 09.05.2025
பயிற்சி வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பம் மற்றும் பயிற்சி கட்டணம் ஆகியவை இணையதளம் (Online) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044-25360041 / கைப்பேசி எண்: 9444470013