ரூ.49,000 வரை ஊதியம்: ஒன்றிய அரசில்
200 காலிப் பணியிடங்கள்!
ஒன்றிய அரசின் இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் 200 டெக்னீசியன் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 10ஆவது, அய்.டி.அய். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும். மாதம் ரூ.49,000 வரை ஊதியம் வழங்கப்படும். இதற்கு மே 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஓய்வூதியம் பெறுவோருக்கும்
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் பெண்களும் சேர்ந்து ரூ.1,000 பெற முடியுமா என பலருக்கு சந்தேகம் உண்டு. அமைப்பு சாரா நல வாரியம் உள்ளிட்ட பிற துறைகளின் வழியாக முதியோர்கள் ஓய்வூதியம் பெற்றாலும், குடும்ப அட்டையில் பெயர் இருப்போருக்கு மாதம் ரூ.1,000 உண்டு. அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.
புதிய வண்ணத்தைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்..!
கலிபோர்னியா யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் யாரும் பார்த்திராத ஒரு வண்ணத்தைக் கண்டுபிடித்ததாகக் சொல்கின்றனர். அந்த நிறத்துக்கு, ‘Olo’ என்றும் பெயரிட்டுள்ளனர். கண்களின் விழித்திரையில் (Retina) இருக்கும் வெவ்வேறு செல்கள் லேசருடன் தூண்டப்படும்போது இந்த வண்ணம் தோன்றும் எனக் கூறுகிறார்கள். தற்போது வரை, உலகில் 5 பேர் மட்டுமே இந்த வண்ணத்தைப் பார்த்துள்ளனர். அவர்கள், இதை ‘நீல-பச்சை’ கலவை என்கின்றனர்.