கன்னியாகுமரி, ஏப். 20- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள் அடங்கிய நூல்கள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. பொதுக்குழு உறுப் பினர் மு.இராசசேகர், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், காப்பாளர் ம.தயாளன்,பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி,தோவாளை ஒன்றிய தலைவர் மா. ஆறுமுகம், இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ்,கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, மு.குமரிச் செல்வன், பா.சு.முத்துவைரவன், ஆன்டர்சன் மற்றும் பெரியார் பற்றா ளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில் பகுதியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை

Leave a Comment