திண்டுக்கல், ஏப். 20- அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்குப் பாராட்டு விழா – தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல்லில் 17.04.2025 அன்று மாலை 5.00மணியளவில் காட்டாஸ்பத்திரி எதிரில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகர தலைவர் அ.மாணிக்கம் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் தி.க.செல்வம் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். மு.நாகராசன், பொதுக்குழு உறுப்பினர்கள் பெ.கிருஷ்ண மூர்த்தி, க.சதாசிவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன், மாவட்ட துணைத்தலைவர் த.கருணாநிதி ஆகியோரின் உரையினைத் தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் தஞ்சை. இரா. பெரியார் செல்வன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில் அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை அழித்து விட்டு மனுதர்ம ஆட்சியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உருவாக்க முயல்கிறது, திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போடுகிறார். தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உச்ச நீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு சட்டப் பிரிவை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் திராவிட மாடல் அரசின் பல்வேறு சாதனைகளை எடுத்துக்கூறி உரையாற்றினார். கூட்டத்தில் மாநகர துணைச் செயலாளர் எஸ்.செபாஸ்டின் சின்னப்பர், மாநகர இளைஞரணி தலைவர் கோ. சரவணன், நரசிங்கன், இரா. ஜவகர் மற்றும் ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் புரபசர் ஈட்டி கணேசனின் மந்திரமா?., தந்திரமா?. எனும் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியில் க.சுந்தர் நன்றியுரை ஆற்றினார்.