நாகை, ஏப். 20- நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூண்டி கடைவீதியில் “அன்றும்.. இன்றும்.. என்றும். தேவை பெரியார் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் 18.4.2025 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.
கீழையூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலை வர் ரெ.ரெங்கநாதன் தலை மையிலும் திராவிடர் கழக நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.
மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மு. இளமாறன் தொடக்க உரையாற்றினார். திரா விடர் கழக தலைமைக் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரை யாற்றினார்.
இறுதியில் கீழையூர் ஒன்றிய செயலாளர் செல்வன் நன்றி உரையாற் றினார். இதில் கவியரசன், தங்க . கிருஷ்ணா, சண்.ரவிக்குமார் உள்ளிட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் பங் கேற்றனர்.