வேலூர், ஏப். 20– வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சியாளர் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாள் விழா அரங்க கூட்டம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமையில் குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார் அரங்கில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் பி தனபால் வரவேற்பு ரையாற்றினார்.குடியேற்றம் நகர திராவிடர் கழக தலைவர் சி.சாந்தகுமார், புரட்சிப் பாடல் களை பாடினார்.குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயக மூர்த்தி அறிமுக உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் இந்நிகழ்வில் தொடக்க உரை யாற்றினார். வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி.இ. சிவக்குமார்,மாவட்ட காப்பாளர் வி.சடகோபன்,தலைமைக் கழக பேச்சாளர் ந.தேன்மொழி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.
குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலுவிஜயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். குடியேற்றம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.சுரேஷ்குமார், மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ண வேணி, வேலூர் மேற்கு மாவட்ட விசிக தலைவர் எம்.சுதாகர்,சி.பி.அய்.எம். மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி,வேலூர் மாவட்ட தி.வி.க. தலைவர் இரா.சிவா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
எழுத்தாளர், தங்கலான் திரைப்பட வசன கர்த்தா அழகிய பெரியவன் விழா சிறப்புரையாற்றினர். விழாவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் படத்திற்கும், தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கும் மலர் மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் வேலூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் உ.விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.ரம்யா, திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் மு.சீனிவாசன், நகர அமைப்பாளர் வி.மோகன், மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.ராஜகுமாரி, மாவட்ட இளைஞரணி தலைவர் இ.தமிழ்தரணி, காட்பாடி திரா விடர் கழக தலைவர்பொ.தயா ளன், கழனிப்பாக்கம் ஒன்றிய அமைப்பாளர் ரவீந்திரன் உள் ளிட்ட 75-க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்கள். முடிவில் பகுத்தறிவாளர் கழக பற்றாளர் ஆசிரியர் ஜெ. தமிழ்ச்செல்வன் நன்றியுரை ஆற்றினார்.