வடகுத்து, ஏப். 20– வடகுத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் விடுதலை வாசகர் வட்ட 99 ஆவது நிகழ்ச்சியாக புரட்சியாளர் அம்பேத்கர்-புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் 12.4.2025 அன்று மாலை 6நடைபெற்றது.
ஒன்றிய கழக தலைவர் ந.கனகராசு தலைமையில், மாவட்ட கழகத் தலைவர் சோ.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட துணைத்தலைவர் மணிவேல், பகுத்தறிவாளர் கழக செயலாளர் அருணாசலம். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல். மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர்மலிங்கம். கடலூர் கழக தலைவர் ராவணன், கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர், ஒன்றிய கழக அமைப்பாளர் சேகர் தீன மோகன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முனியம்மாள், கலைச்செல்வி, சுமலதா, திராவிட மணி, அறிவு, பொன்னி, பகுத்தறிவு எழுத்தாளர் அசோக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
“இல்லை என்போன் நானடா!” எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், “ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்”எனும் தலைப்பில் மாவட்ட செயலாளர் எழிலெந்தி ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினர். திமுக செல்வராஜ், கோபால், நெய்வேலி பாவேந்தர் விரும்பி ,ஆய்க்குப்பம் வள்ளல் குமார் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். முடிவில் நூலகர் இரா. கண்ணன் நன்றி கூறினார்.