திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கோவையில் நடைபெறவுள்ள, மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழை, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 15.04.2025)
முத்தமிழறிஞர் கலைஞரின் முதன்மைச் செயலாளர் ராஜரத்தினம் அய்.ஏ.எஸ்., வழக்குரைஞர் நாகநாதன் ஆகி யோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து கவிஞர் கருணானந்தம் நூற்றாண்டு விழாவின் ஏற்பாடுகள் குறித்து உரையாடினர். (சென்னை, 15.04.2025)
நாஞ்சில் ஆர்.கென்னடி (தி.மு.க.) தனது மகள் திருமண அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 15.04.2025)
கடலூர் அரசு வழக்குரைஞர் கோ.வனராசு, உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் புனிதன், நவீனா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். (சென்னை, 15.04.2025)
அரக்கோணம் கோவிந்தராஜ் (தி.மு.க.) விடுதலைக்கு 2,000/- ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் பு.எல்லப்பன், அரக்கோணம் சு.லோகநாதன். (சென்னை, 15.04.2025).
சென்னை காமாட்சி மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பூங்கொத்து வழங்கினார். உடன் பேராசிரியர் வீ.அரசு. (சென்னை, 15.04.2025)