1. மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது.
2. மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும்.
3. மனித சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.
4. மனித சமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய ஒருமையே நிலவ வேண்டும்.
5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும்.
6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும்.
– தந்தைபெரியார்
“குடிஅரசு’ – செய்தி விளக்கம் – 06.12.1947