நாவை சுழற்றுகிறார் அண்ணாமலை
நாற்காலிகள் மட்டும் காலி!
கரூரில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற அக்கட்சி யின் மாநாட்டில் போடப்பட்டிருந்த ஏராளமான இருக்கைகள் தொண் டர்கள் இன்றி காலியாக கிடந்தன.
கரூரில் திருவள்ளுவர் விளை யாட்டு மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாற்றத்திற்கான மாநாடு என்ற பெயரில் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை கலந்து கொண்டு உரையாற் றினார். மாநாட்டில் 8 ஆயிரத்து 500 பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
இதில், மேடையின் முன் பகுதி யில் போடப்பட்டிருந்த நாற்களில் தொண்டர்கள் இருந்தனர். பின்னால் இருந்த நாற் காலிகள் தொண்டர்கள் இன்றி காலி யாக இருந்தன.
மேலும், மாநாட்டில் அண்ணா மலை பேசிக்கொண்டி ருந்த போதே கூட்டத்தில் இருந்த பலர் கலைந்து சென்றதையும் காண முடிந்தது.
பாரதிய ஜனதா கட்சியின் மாற்றத் திற்கான மாநாட்டை ஏற்காத பொது மக்கள் பலரும், அங்கிருந்து வெளி யேறினர்.
இதனால், மாநாடு மக்கள் கூட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது.