சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் – இரண்டாக பிரிப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,நவ.14- சென்னை விமான நிலையத்தின் உள் நாட்டு முனையம் டெர்மினல் 1, டெர்மினல் 4 என இரண்டாக பிரிக்கப்பட்டு, நாளை (15.11.2023) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

சென்னை விமான நிலையத் தில் புதிய ஒருங்கிணைந்த பன் னாட்டு முனையத்தை, 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப் பளவில், ரூ.2,467 கோடி திட் டத்தில் இரண்டு கட்டங்களாக கட்டுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018ஆம் ஆண்டில் முடிவு செய்து பணிகளை தொடங் கியது.

அதில் முதல் கட்ட பணி, 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப் பளவில், ரூ.1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைந்த பன் னாட்டு முனையம், டெர்மினல் 2அய் (டி 2) கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத் தார்.

புதிய முனையத்தில் விமான சேவை கடந்த ஜூலை 7ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பன் னாட்டு முனையமாக செயல் பட்டுக் கொண்டிருந்த டெர் மினல் 3, 4 ஆகியவை முழுவது மாக மூடப்பட்டன.

டெர்மினல் மூன்றை இடிக்கும் பணி நடக்கிறது. அந்த பணி முடிந்ததும், விமான நிலைய இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளன.

பழைய பன்னாட்டு முனை யத்தின் டெர்மினல் 4 நல்ல நிலையில் இருப்பதால், அதை இடிக்காமல் கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக பயன் படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. 

அதன்படி, பன்னாட்டு முனை யமாக இருந்த, டெர்மினல் 4அய், உள்நாட்டு முனையமாக மாற்றி அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி நிறை வடைந்தது. இதைத் தொடர்ந்து.

நாளை இந்த புதிய உள் நாட்டு முனையம் செயல்பாட் டுக்கு வரவுள்ளது. முன்னதாக இன்று புதிய உள்நாட்டு முனை யம் டெர்மினல் 4இல் சோதனை அடிப்படையில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்றவை நடைபெறுகின்றன.

எந்த விமானங்கள் எந்த டெர்மினலில் இருந்து புறப் படும் என்பது பற்றிய அறிவிப்பு பலகைகள், பயணிகள் வசதிக் காக அடுத்தஓரிரு நாள்களில் அமைக்கப்படவுள்ளன. 

சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1, டெர்மி னல் 4 என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் இடவசதியும் கிடைக்கும். கூடு தல் விமான சேவைகள் இயக்க முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *