மயிலாடுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக 1-7-2023 அன்று மாலை ஆறு மணியளவில் செம்பனார்கோயில் மேலமுக்கூட்டு அண்ணாசிலை அருகில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா நடைபெற்றது. வைத்தீசுவரன்கோயில் நகர கழக தலைவர் வி.ஆர்.முத்தையன் தொடக்க உரையாற்ற, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.சாமிதுரை, மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், திமுக மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.எஸ். கருணா ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து இறுதியாக கழக பேச்சாளர் இரா. பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கி. தளபதிராஜ் அறிமுக உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
அண்ணாசிலை அருகில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா
Leave a Comment