உ.பி.சாமியார் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டிருக்கிறது. ஆனால் அமித்ஷா இங்கே தமிழ்நாட்டுக்கு வந்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி விட்டுச் செல்கிறார்! சட்டம் ஒழுங்கை காப்பாற்றவேண்டிய உயர்காவல் அதிகாரியே கர்ணி சேனா எனப்படும் ஜாதிய அமைப்பின் ஊர்வலத்தில் சீருடையோடு கலந்துகொண்டு முழக்கம் போட்டு கொண்டு செல்கிறார். காரணம் அந்த அதிகாரியும் கர்ணிசேனா அமைப்பினரும் ஒரே ஜாதியாம்! யார் தலையிலும் தலைக்கவசம் இல்லை.
(இடம்: உத்தரப் பிரதேசம் ஆக்ரா 11.04.2025)
உத்தரப்பிரதேசம் ஹசாரி பாக் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனீஷ் ஜைஸ்வால் கத்தி, துப்பாக்கி உள்ளிட்டவைகளை தனது தொகுதி கர்ணி சேனா அமைப்பினருக்கு வழங்கினார். 11.04.2025
இந்த கூட்டம் தான் கூறுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று. குளிர் சாதனப் பெட்டியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி முகமது அட்லாக் என்பவரை அடித்துக் கொன்ற கூட்டம் தான் வன்முறையைப் பற்றிப் பேசுகிறது!
குற்றவாளிகளுக்குத் தண்டனை என்ன தெரியுமா? அரசுப் பணியில் அட்டகாசமாக வேலை பார்க்கிறார்கள்.