பாக்கம் கோட்டூர், ஏப். 19- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் பாக்கம் கோட்டூர் கடைவீதியில் 14.4.2025 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா – “அன்றும்.. இன்றும்.. என்றும். தேவை பெரியார் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் மாலை 6.00 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.
திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகத் தலை வர் கு.சின்னதுரை தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக .பொன்முடி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச.முருகையன், ஒன்றிய துணை செயலாளர் ப.செல்வகுமார் ஆகியோர் கூட்டத்தில் முன்னிலை வகித்தனர்.
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்
கூட்டத்தின் தொடக் கத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்திற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். தோழர்கள் அனைவரும் சமத்துவ நாள் உறுதி மொழியை ஏற்றனர்.
அதனை தொடர்ந்து மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் தொடக்க உரையாற்றினார். கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரை யாற்றினார்.
என்றும் தேவைப்படுகிறார் பெரியார்
அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர், என்றும் தேவைப்படுகிறார் பெரியார், ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையால் பாதிக்கப் படுவது நம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர் களே என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இக்கூட்டத்தின் கருத்துக் களை பொது மக்கள் பெருந்திரளாக கூடி கேட்டு உணர்ந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்றோர்
கூட்டத்தின் இறுதியில் திராவிட மாணவர் கழக நாகை மாவட்ட தலைவர் மு.குட்டிமணி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட மகளிர் பாசறை செயலா ளர் ஜெயப்பிரியா, மகளி ரணி பொறுப்பாளர் ரம்யா, நன்னிலம் கிளைக் கழக திராவிடர் கழக தோழர்கள் என ஏராளமான ஒரு பங் கேற்றனர். எழுச்சியோடு நடைபெற்ற இக்கூட்டம் இரவு 9 மணி அளவில் நிறைவடைந்தது.