தஞ்சை, ஏப். 19- தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் ஏப்ரல் 15இல் தஞ்சை புதிய பேருந்து நிலையம் ஆர்.ஆர் நகரில் மாலை 6:00 மணி அளவில் தஞ்சை மாவட்ட திரா விடர் கழக உரிமை மீட்க “சுழலும் சொற்போர்” பிரச்சார கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். புதிய பேருந்து நிலைய பகுதி கழக தலைவர் சாமி.கலைச்செல்வன் தலைமை உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர்.இந்த நிகழ்ச்சியை தஞ்சை மாநகர தலை வர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார் ஆகி யோர் ஒருங்கிணைத்தனர். தஞ்சை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் ஆகியோர் தொடக்க வுரையாற்றினர்.
இந்த கூட்டத்தின் நோக்கத்தினை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரப் பாண்டியன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
பிறந்தநாள் வாழ்த்து
கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் அவர்களுக்கும் மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் ஆகியோருக்கு மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
திராவிட இனத்தின் உரிமை மீட்க சுழலும் சொற்போரின் மாநில கிராமப்பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் நடுவராக சொற்போரை தொடங்கினார்.
திராவிட மாடல் ஆட்சியை காப்போம்.!! என்னும் தலைப்பில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் திராவிட மாடல் அரசு ஆட்சியின் நன்மையையும், பயனையும் எடுத்துரைத்தார்.
அதற்கு பின்னதாக பண்பாட்டு படையெடுப்பை தகர்ப்போம்.!! என்னும் தலைப்பில் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் ஆரிய பண்பாட்டின் படையெடுப்பை தனது கருத்துகளால் தகர்த்தெரிந்தார்.
இறுதியாக ஆரிய சூழ்ச்சியை அடியோடு வீழ்த்துவோம்.! என்னும் தலைப்பில் கழக பேச்சாளர் வழக்கு ரைஞர் பூவை.புலிகேசி ஆரிய சூழ்ச்சியை அடியோடு வீழ்த்தினார்.
இறுதியாக நடுவர் முனைவர் அதிரடி க.அன்பழகன் திராவிட உரிமை மீட்பு வாதங்களை கேட்டு திராவிட இனத்தின் உரிமையை எடுத்துரைத்து சொற்போரை சுழற்றினார் பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பை தகர்த்திட ஆரிய சூழ்ச்சியை அடியோடு வீழ்த்திட திராவிட மாடல் அரசை பாதுகாப்போம் என்று தீர்ப்பு கூறி நிறைவு செய்தார்.
மாநகர துணைத்தலைவர் அ.டேவிட் நன்றியுரை கூறினார்.
இக்கூட்டத்தில் கரந்தை பகுதி கழக செயலாளர் ம.தனபால், ஈ.பி காலனி பகுதி செயலாளர் வெ.இரவிக்குமார், புதிய பேருந்து நிலையப் பகுதி செயலாளர் சவுந்தர்ராஜன் மாநகரச் துணைசெயலாளர் இரா.இளவரசன், மாநில ஊடகப்பிரிவு தலைவர் பக மா.அழகிரிசாமி,மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், பக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாவட்ட மகளிரணி தலைவர் அ.கலைச்செல்வி, மாநகர மகளிரணி தலைவர் ந.கலைச்செல்வி, மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் அ.ராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன் றிய தலைவர் இரா.சேகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் அரசூர் க. அன்பழகன், பக மாவட்ட செயலாளர் பாவலர்.பொன்னரசு, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்கடேசன், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ. பெரியார் செல்வன், தி.மூர்த்தி, க.கருணா மூர்த்தி பகுத்தறிவாளர் கழகம், இரா.பரந்தாமன் மாநகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவு தாசன், பகுத்தறிவாளர்கள் விஏஓ துரை,மாநகர ப.க.செயலாளர் நாகநாதன், பகுத்தறிவாளர் ஏழுமலை, திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணண், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், திருவையாறு நகரத் தலைவர் கவுதமன், திருவேதிக்குடி ரவி, குலமங்கலம் கணேசன், பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர் விஜயகுமார், மண்ணை சித்து, ஏவிஎன் குணசேகரன், பூதலூர் ஒன்றிய ப.க. தலைவர் துரைராஜ், பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, ந.காமராசு, பிள்ளையார்பட்டி முருகேசன், மாவட்ட ப.க.அமைப்பாளர் கு.கவுதமன், கன்டியூர் மோகன்ராஜ், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் இரா.சரவணக்குமார் எல்.ஜெகதா ராணி ச.பிரபாகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அறிவு கருத்தினை பெற்றனர்.
தஞ்சாவூர் அரசு குந்தவை நாச்சியார் கலை கல்லூரியின் ஆண்டு விழாவில் சமூக சேவைக்கான விருது பெற்ற மாநகரத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத் தொடக்கத்தில் பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் பொன்னரசு கலைச்செல்வி அமர்சிங் பெரியார் செல்வன் ஆகியோர் கழக பாடல்களை பாடினர்.