மதுரை, ஏப். 19- மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக கலந்து றையாடல் கூட்டம் 12.4.2025 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் -வீரமணி அரங்கத்தில் உற்சாகம் பொங்க நடை பெற்றது.
மாவட்ட செயலாளர் லீ.சுரேசு வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அ.முருகானந்தம் தலைமை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவித்த தீர் மானங்களை செயல்படுத்த வேண் டிய கடமையினை விளக்கி தொடக்க வுரையாற்றினார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் தமிழர் தலைவர் ஆசிரியர் அரும்பெரும் தொண்டினை விளக்கி உரையாற்றினார்.
மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் வா.நேரு தமது உரையில் மதுரையில் காலமான பெரியார் பெருந் தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன் என தெரிவித்தார்.
மாநில வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன் “எமது பகுதியிலிருந்து தெருமுனை பிரச்சாரம் கூட்டம் தொடங்குவோம்’ என கூறினார்.
மாவட்ட துணைத்தலைவர் இரா.திருப்பதி, பெரியார் பெருந்தொண்டர் க.அழகர், வண்டியூர்கிருட்டிணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் இராக்குதங்கம், மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி தலைவர் பெ.பாக்கியலெட்சுமி, காப்பாளர் சே. முனியசாமி, மந்திரமா-தந்திரமா சுப.பெரியார்பித்தன், மாவட்ட ப.க.தலைவர் பால்ராசு, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் தேவராஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தமிழர் தலைவர் ஆசிரியரின் விழைவின்படி பரப்புரை கூட்டங்களை நடத்துவோம் என உணர்ச்சி பூர்வமாக கருத்துரை வழங்கினார்கள்.
சிதம்பரம் பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
“பெரியாரால் வாழ்கிறோம்” என்ற தலைப்பில் மாநகரின் 100வட்டங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக தே.எடிசன்ராசா, வே.செல்வம், காப்பாளராக சே.முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர்களாக ராக்குதங்கம், சோ.சுப்பையா,அறக்கட்டளை உறுப்பின ராக அ.முருகானந்தம் ஆகியோர்களை நியமனம்செய்த தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றிதெரிவித்துக் கொள்வதெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாதந்தோறும் அரங்க கூட்டங்கள், நடத்துவதற்கு வாய்ப்பாக பெரியார்-வீரமணிஅரங்கம்அமைத்துத் தந்திட்ட பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் அ.முருகானந்தம் ,
வாரந்தோறும் காணொலி வழியாக கூட்டங்கள் நடத்திவரும் பகுத்தறிவு எழுத்தாளர்மன்றத்தலைவர்வா.நேரு, அனைத்து நிகழ்வுகளையும் ஒன் றிணைத்துச் செயலாற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் உள்ளிட்ட மாநில மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பயனாடை போர்த்தி பாராட்டுதெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் நா.முருகேசன், க.சிவா, மாவட்ட துணைச்செயலாளர் பொ.பவுன்ராசா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.காசி, இல. செல்லதுரை புதூர்அ.பாக்கியம், செல்லூர் பெ. தனசேகரன், கு மாரிமுத்து, அனுப்பானடி எஸ்.கண்ணன், சி.வேல்துரை, கி.தியாகராஜன், செ.விடுதலை செல்வம், மேலூர் பெரியசாமி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
இரா.அழகுபாண்டியின் நன்றியுரை யுடன் கூட்டம் நிறைவடைந்தது.