நாங்கள் ஹிந்தியர்கள் கிடையாது: ராஜ் தாக்கரே
மகாராட்டிர பள்ளிகளில் 3ஆவது மொழியாக ஹிந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் அறிவிப்பை நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார். தாங்கள் இந்துக்களே தவிர ஹிந்தியர்கள் இல்லை எனவும், ஹிந்தி தேசிய மொழி இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தேர்தல் வெற்றிக்காக மராத்தியர்கள்- மராத்தி அல்லாதவர்களுக்கு இடையே அரசு மோதலை உருவாக்குவதாகவும் சாடியுள்ளார்.
பொங்கல் இலவச வேட்டி, சேலை.. ரூ.75 கோடி ஒதுக்கீடு
2026ஆம் ஆண்டு பொங்கலுக்கு மக்களுக்கு அரசு இலவசமாக வேட்டி-சேலை வழங்கவுள்ளது. இதற்காக முன்கூட்டியே 1.46 கோடி சேலைகளும், 1.44 கோடி வேட்டிகளும் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியிலான ஆணையை பிறப்பித்துள்ளது. மேலும், இலவச வேட்டி-சேலைக்காக அரசு முதல்கட்டமாக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, வரும் ஜூன் மாத தொடக்கத்தில் தயாரிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து அடுத்தடுத்து விலகல்
பாஜக உடன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உள்பட பலர் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டுகள் கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக பக்கீர் மய்தீன் என்பவர், அதிமுக தலைமைக்கு எழுதிய கடிதம் வைரலாகிறது.
நில ஆவணங்களை
எளிதாக அறிய புதிய செயலி!
எளிதாக அறிய புதிய செயலி!
நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை, அறிய புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது. அலைபேசியில், ‘Tamilnilam Gioinfo’ செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ, அந்த இடத்தின், கூகுள் மேப்புடன், சர்வே எண் விவரங்கள் டிஸ்பிளே ஆகும். அடுத்த சில மாதங்களில், இந்த செயலி செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இது வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்க்க உதவும்.
வங்கிகளில் வட்டி குறைப்பு
SBI, BOI வங்கிகளைத் தொடர்ந்து, கடன்கள் மீதான வட்டியை BOM-ம் குறைத்துள்ளது. SBI வங்கி, வீடு, வாகன கடன்கள் மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி (IOB), இந்தியன் வங்கியும் கடன்கள் மீதான வட்டியை குறைத்தன. இதையடுத்து பேங்க் ஆப் மகாராட்டிராவும் (BOM ) தற்போது வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.