கடவுள் பிரச்சாரம் சுலபமாகவும், மக்களை வசப்படுத்திடுவது சாதாரணமாகவும் ஆகிவிட்டது. இல்லையா? கடவுள் என்ற உணர்ச்சியை மக்களிடம் புகுத்துவதற்காக ஒரு மானசீக உலகத்தை – மோட்சம் — நரகத்தைக் கற்பித்து, அதைப் பரப்பப் பல கோயில், மடம் போன்ற நிறுவனங்களை ஏற்படுத்திப் பிரச்சாரம் செய்து அதன் மூலம் வாழவும் பிழைக்கவும் ஒரு கூட்டமும் ஏற்பட்டு விட்டதன்றி வேறு என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’