அரூர், ஏப். 19- அரூர் கழக மாவட்டம் வெங்கடசமுத்திரம் நான்கு வழி சாலை சந்திப்பில் திராவிட மாணவர் கழகம் சார்பில் 13.4.2025 அன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட மாணவர் கழக தலைவர் சாய்குமார் தலைமையில் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொறுப்பாளர் அழகிரிசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத்குமார்,புகழரசன், குமரேசன், மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில கழக கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி தொடக்க உரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அ தமிழ்ச்செல்வன் இயக்க நூல்களை வெளியிட்டு கருத்துரையாற்றினார். திமுக மாணவர் அணி பொறுப்பாளர் சதா சுர்ஜித் கருத்துரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழக சொற் பொழிவாளர்கள் த.மு. யழ்திலீபன், சு. பெ.தமிழமுதன் ஆகியோர் தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் ஒரு ஒப்பீடு, ஆர்எஸ்எஸ் பிஜேபியால் ஏற்படும் அபாயங்கள், திராவிட மாடல் ஆட்சி யின் சாதனைகள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசதாசனின் கவிதை யாக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் இ. சமரசம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியில் வேலூர் பெரியார் அம் பேத்கர் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் சரவணன், சுஜாதா, தீட்சண்யா, பிரதாப்,மதி, சிறீராம், அன்புச்செல்வி, புனிதவதி, மது,பிரியா, தென்னவன், உள்ளிட்ட வர்கள் கலந்து கொண் டனர், இறுதியாக திராவிட மாணவர் கழக ஒன்றிய செயலாளர் பிரதாப் நன்றி கூறினார்.