கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பணமதிப்பிழப்பு.
நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்ட ஜி.எஸ்.டி.
சட்டப்படி லஞ்சம் வாங்க தேர்தல் பத்திரம்.
ஏழை எளிய மாணவர் மருத்துவக் கனவைச் சிதைக்க நீட் தேர்வு.
மாணவர்களைக் கல்வியிலிருந்து வெளியேற்ற தேசிய கல்விக்கொள்கை.
குலத்தொழிலை ஊக்குவிக்க விஸ்வர்கர்மா திட்டம்.
விவசாயத்தை அழிக்க புதிய வேளாண் சட்டம்.
தாய் மொழியை அழிக்க மும்மொழிக் கொள்கை.
முஸ்லீம் சொத்துகளை அபகரிக்க வக்பு சட்ட திருத்தம்.
இப்படி பாஜக ஒரு சட்டத்தை யாருக்கு எதிராக கொண்டு வர நினைக்கிறார்களோ – முதலில் அந்தச் சட்டம் அவர்களுக்கு ஆதரவானது போல ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் மக்களிடையே பரப்புவார்கள்.
உண்மையில நம் மாணவர்களின் கல்வியைச் சிதைத்து ஆங்கிலத்தை இல்லாமல் செய்து ஹிந்தியை திணித்து தமிழ் மொழியையே அழித்து எதிர்காலத் தமிழர்களை வெறும் உடல் உழைப்பை நம்பி இருக்கும் அடிமைகளாக மாற்றத்தான் பாஜகவை பார்ப்பனியக் கூட்டம் இயக்கி இதுபோன்ற சட்டங்களை இயற்ற வைக்கிறது.
இதை எதிர்த்துப் போராடாவிட்டால் நம் எதிர்காலத் தலைமுறையே நாசமாயிடும். எச்சரிக்கை!
பா.ஜ.க.வும் – அதன் சட்டங்களும்

Leave a Comment