பழனி, ஏப். 18- அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன் னிட்டு பெரியார் மருத் துவக் குழுமம் மற்றும் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத் துவமனை இணைந்து புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம், சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாமினை 13.04.2025 அன்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பழனி, புது ஆயக்குடி பேருராட்சி அரு கிலுள்ள சுபிட்சா மண மண்டபத்தில் நடத் தியது.
மருத்துவர் கவுதமன்
பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மரு. இரா. கவுதமனின் வழிகாட்டுதலில் நடை பெற்ற இம்மருத்துவ முகாமின் துவக்க விழா ஆயக்குடி சுபிட்சா மண மண்டப உரிமையாளரும் தொழிலதிபருமான க. பிச்சைமுத்து தலைமையில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தொடக்க வுரை நிகழ்த்தி மருத்துவ முகாமினை துவக்கி வைத்து சிறப்பித்தார். ஆயக்குடி 16ஆவது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி மற்றும் வி.சி.க. மாவட்ட அமைப்பாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் ஆயக்குடி மரத்தடி மையம் ராம மூர்த்தி மற்றும் மார்கஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தேசிய நதி நீர் இணைப்பின் மாவட்டத் தலைவர் சின்ராஜ் வரவேற் புரையாற்றிய இம்மருத்துவ முகாமில் ஆயக்குடியைச் சார்ந்த சின்னத்துரை, வேலுசாமி, பிரகாஷ் மாயவன், ஜான்சிராணி, தர்மராஜ், சுப்பிரமணி, ராகுல், மனோகரன், கிட்டான், பழனி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா. முருகன், மாவட்ட செயலாளர் பொன். அருண்குமார், ஒன்றிய செயலாளர் ஜான் குட்டி, மாவட்ட இளைஞரணி தலைவர் சி. கருப்புச்சாமி, இளைஞரணி செயலாளர் ப.பாலன் மற்றும் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைகோ செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக ரமா பிச்சை முத்து நன்றி கூறினார்.
புற்றுநோய் மருத்துவ முகாம்
ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் மருத்துவர் மானுசிறீ மற்றும் மருத்துவக் குழுவினர் தலைமையில் நடைபெற்ற சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவமுகாமில் 102 பேரும், ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் பெண்கள் நல மய்ய மருத்துவர் சவுமியா மற்றும் மருத்துவக் குழுவினர் தலைமையில் நடைபெற்ற மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரி சோதனையில் 41 பேரும் கலந்து கொண்டு பயன டைந்தனர்.
இம்மருத்துவ முகா மில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெசிமா பேகம், பேரா. இராஜேஷ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பொது மக்களுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். ச்சி பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் செவிலியர் காமாட்சி மற்றும் செவிலிய உதவி யாளர் பயிற்சி மாணவி மோனிகா ஆகியோர் பொது மக்களுக்கு குருதி அழுத்தம், குருதி சர்க்கரை போன்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்காண்டனர்.
இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளை யும் தொழிலதிபர் க.பிச்சைமுத்து மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அருணாசலம் ஆகியோர் சிறப்பாக செய்ந்தினர். கவுன்சிலர் சரஸ்வதி மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோர் முகாமிற்கான அனைத்து உதவிகளை செய்ததோடு முகாம் சிறப்பாக நடைபெற உறு துணையாக திகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.