ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் நினைவு நாள் (18.04.1955)
கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ( Theoretical Physicist) ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் அவர்கள் இருபதாம் நூற் றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர்களில் ஒருவ ராக கருதப்படுவதோடு, இது வரை வாழ்ந்த இயற்பிய லாளர்களில் தலைசிறந்த இயற்பியலாளர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன் வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல் (Quantum Mechanics) புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். குவாண்டம் எந்திரவியல், சார்புக் கோட்பாடு இரண்டும் நவீன அறிவியலின் இரு தூண்களாக கருதப்படுகிறது. ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாடு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காககவும், 1921இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1999இல் புதிய ஆயிரம் ஆண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் ( இதழ் ) ” இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர் ” என்ற பெயரை அய்ன்ஸ்டீனுக்கு வழங்கியது.