பெரம்பலூர், ஏப். 18- பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் எனும் எட்டாவது மாதாந்திர கூட்டம் 12.4.2025 அன்று மாலை 6:00 மணி அளவில் மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகம் பெரம்பலூரில் மாவட்ட கழக காப்பாளர் ஆறுமுகம் தலை மையேற்க மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் விசயேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அரங்க ராசன், பகுத்தறிவாளக் கழக மாவட்ட தலைவர் நடராசன், மாவட்டம் மகளிர் அணி தலைவர் மருத்துவர் குணகோமதி உள்ளிட்டோர் முன்னிலையில் சிறப்புரையாக மாயக்கண்ணன் “அம்பேத்கர் வாழ்வின் தத்து வம்” என்கின்ற தலைப்பில் நீண்ட தொரு சிறப்பான வாழ்வியல் கருத்துகளை மக்களிடையே எடுத்துரைத்தார். ஏராளமான பொதுமக்களும் அனைத்துநிலை கழக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி நன்றி உரை யோடு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
சிறப்பு அழைப்பார்களாக ஆத்தூர் கழக மாவட்ட செய லாளர் வீ.சேகர், ஆத்தூர் பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அம்பேத்கர் வாழ்வின் தத்துவம் – கருத்தரங்கம்

Leave a Comment