செய்தி: ‘‘நாட்டிலேயே மரியாதை மிக்க வர் குடியரசுத் தலைவர் தான்!’’ – ெஜகதீப் தன்கர் கூறுகிறார்
சிந்தனை: மேனாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டுவிழாவிற்கு அழைக்கவில்லை.
புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவிற்கு தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்கவில்லை.
ராமன் கோவில் திறப்பு விழாவில் உலகின் தென் மூலையில் உள்ள சிலி நாட்டின் ஹிந்து மத அமைப்பின் தலைவரை அழைத்தனர். ஆனால், குடியரசுத் தலைவராக உள்ள திரவுபதி முர்முவிற்கு அழைப்பில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராமன் கோவிலுக்கு திரவுபதி முர்மு சென்றபோது, உண்மையான ராமன் சிலையை திரைக்குப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு, வெளியில் உள்ள ராமன் சிலையை காண்பித்து, கும்பிட வைத்தனர். இவ்வளவு நடந்தபோது மவுனமாக வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது மட்டும் குடியரசு துணைத் தலைவருக்கு அக்கறை வந்தது ஏன்?