காளையார்கேவில், ஏப். 16- காரைக்குடி கழக மாவட்டம் காளையார்கோவிலில் 13.04.2025 மாலை தேரடித் திடலில் தொண்டறத்தாய் அன்னை மணியம் மையார் 106 ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் 72ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
ஒன்றிய கழகத் தலைவர் து.அழகர்சாமி, வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் ம.கு.வைகறை தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் சி.செல்வ மணி மாவட்ட துணைச்செயலாளர் இ.ப.பழனிவேல் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தனது உரையில் ‘ திராவிட நாயகர் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை தமிழ் நாடு எங்கும் திராவிடர் கழகம் பரப்புரை மேற்கொள்வதின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
காளையார்கோவில் ஒன்றிய திமுக செயலாளர் வே.ஆரோக்கியசாமி தனது தொடக்க உரையில், திராவிடர் கழகத்தின் பெரும் பணியையும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழ்நாடு எங்கும் பரப்புரை மேற்கொள்ளும் தொண்டர்களின் தியாகத்தையும் உணர்ச்சி பூர்வமாக எடுத்துரைத்தார்.
மாவட்ட கழக காப்பாளர், சாமி.திராவிடமணி தனது உரையில், இந்த நாள் ஏப்ரல் 13 மண்டல் குழு பரிந்துரையை உருவாக்கிய பி.பி. மண்டலின் நினைவு நாள், மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்ற திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களை, ஆர்ப் பாட்டங்களை, பரப்புரைகளையும், காளையார் கோயில் நாட்டு விடுதலைக்கு போராடிய தியாக மறவர்களின் மண் என்பதையும் விளக்கினார். தி.என்னாரெசு பிராட்லா தனதுரையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு காளையார் கோயிலில் கழகத் தோழர்களின் களப்பணி புது பாய்ச்சலை ஏற்படுத்தி இருப்பதையும், திராவிட மாடல் ஆட்சியை கண்ணை இமை காப்பது போல திராவிடர் கழகம் காக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது எனவும் எடுத்து கூறினார்.
இரா.பெரியார்செல்வன்
சிறப்புரையாற்றிய கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் அறிவாசான் தந்தை பெரியார் கொள்கை வெற்றியையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அரும்பெரும் தொண்டினை விளக்கியும், உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற மாநில உரிமைக்காவலர் முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்து எழுச்சியுரையாற்றினார்.
மக்கள் நீதிமய்யத்தின் நிர்வாகி, சுயமரியாதை வீரர் பெரியார் குணாகாசன், மாவட்ட துணைத்தலைவர் கவிஞர் கொ. மணிவண்ணன், ஆகியோர் சிறப்பாக உரைநிகழ்த்தினார்கள்.
நிகழ்வில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில ப. க. அமைப்பாளர் ஒ. முத்துக்குமார், மாவட்ட ப.க தலைவர் துரை. செல்வம் முடியரசன், தேவ கோட்டை நகரத் தலைவர் வீ. முருகப்பன், காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், காரைக்குடி மாநகர துணைத் தலைவர் அ. பழனிவேல்ராசன், கல்லல் ஒன்றிய தலைவர் பலவான்குடி ஆ.சுப்பையா, கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ. பாலு, கல்லல் ஒன்றிய அமைப்பாளர் ஆலம்பட்டு கி. சங்கு நாதன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் அ. ஜோசப், திருவாடானை ஒன்றிய தலைவர் புருஷோத்தமன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் எழுத்தாளர் குமரன் தாஸ், சி. சூரியமூர்த்தி, சொ. சேகர், திராவிட மகளிர் அமைப்பாளர் இள நதியா, முத்துகுமார், பொன். துரை, காரைக்குடி ராஜா, பெரியார் பிஞ்சுகள் அ. கலை முகிலன், அ. அகல்யா ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதியில் ஒன்றிய செயலாளர் பா.இராஜ்குமார் நன்றி கூறினார். காளையார் கோயில் ஒன்றிய கழக புதிய பொறுப்பாளர்களான ஒன்றியதலைவர் து.அழகர்சாமி, ஒன்றிய செயலாளர் பா.இராஜ்குமார் ஆகியோர்க்கு மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.