லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கோரிக்கை
லால்குடி, ஏப். 18- தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் குறித்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பேத்கர் பிறந்த நாள்
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா (ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காப்பு நாள் – ஏப்ரல் 14) கீழவாளாடி கிராமம், அன்பு இல்லத்தில், லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முனைவர் வீ.அன்புராஜா, தலைமை தாக்கினார். இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் பாபுராஜ், லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் மு.செல்வி மற்றும் லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக தோழர்கள் அங்கமுத்து, இலால்குடி மாவட்ட செயலாளர், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலார் ஆசைத்தம்பி, மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை தலைவர் பெரியசாமி, மேனாள் திருச்சி மாவட்ட செயலாளர் சிவசங்கர், முத்துசாமி, முருகன் திருவரங்கம் பகுதி செயலாளர், திருபஞ்சிலி முருகேசன் மண்ணச்சநல்லூர் ஒன்றிய மேனாள் செயலாளர், லால்குடி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பனிமலர் செல்வன், லால்குடி மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் இன்பராஜ், பொதுக்குழு தலைவர் செம்பரை தர்மராஜ், புள்ளம்பாடி ஒன்றிய பொறுப்பாளர்கள் திருநாவுக்கரசு, வெ.சித்தார்த்தன், திராவிட முன்னேற்ற கழக தோழர் பிரதிவிராஜ், லால்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சண்முகவேல், கவுதமன், கிள்ளிவளவன், கீழவாளாடி கிளை கழக இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், ரஞ்சன், வாணிதாசன், மகளிர் அணி பொறுப்பாளர்கள், வசந்தகுமாரி, மீனா, மாணவர் அணி செ.அ.அறிவு சுடரொளி, செம்பழநி ஆனந்த், வாழ்மானபாளையம் பிச்சையா, கீழவாளாடி அபிநயா, ஜீவானந்தம், கரிகாலன், சி.அம்பேத்கர், லத்தீஸ்வரன், ரட்சகன், சூர்யா, அஸ்வின்ராஜ், அ.முருகேசன், பி.அம்பேத்கர், மகிழன். இ.வினோத், க.ஹரிஸ், க.ஹரிணி, ஜெ.காவியா, ஷீலா, காயத்திரி, சுஜாதா மற்றும் பெரியார் பிஞ்சுகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
பொது அறிவு நூல்கள்
இந்த நிகழ்ச்சியில் தொடக்கமாக மு.செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார். டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பாசூர் க.அசோகன் பகுத்தறிவு பாடல்கள் பாடினார். லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் மோ.பாபுராஜ், “அறிவுலக மாமேதை டாக்டர்
பி.ஆர்.அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
முனைவர் சே.தமிழரசன், பேராசிரியர் (ஓய்வு), “சங்கத்தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், பெ.மோகன், போட்டி தேர்வில் அதிக அளவில் கலந்துகொண்டு சிறந்த ஆளுமைகளாக உருவாக வேண்டும் என்றும், அப்போதுதான் கடை மட்டத்தில் உள்ள மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள், முழுமையாக சென்றடையும் என்றும், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உரையாற்றி போட்டி தேர்வில் கலந்து கொள்ள உள்ள மாணவர்களுக்கு பொது அறிவு நூல்கள் வழங்கினார்.
ஹென்சி, முதுகலை ஆசிரியர் வெறுமனே பட்டம் பெறுவதாக கல்வி ஒருபோதும் அமைய கூடாது, சமத்துவம், சமூக முன்னேற்றம், அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் பெறுதல், பிறருக்கு கற்பித்தல், அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தால் போன்றவற்றின் விளைச்சலாக கல்வி இருக்கவேண்டும் என்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். வழக்குரைஞர் அ.சதீஷ் குமார், “இந்தியா அரசியல் சட்டமும், அதன் திருத்தங்களும்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
ஆசிரியர் மு.செல்வி, “ஆசிரியர்களும் பகுத்தறிவு சிந்தனைகளும்” எனும் தலைப்பில் மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையையும், அரசியல் மனப்பான்மையையும் வாழ்வியலோடு இணைத்து எப்படி பாடம் கற்பிப்பது குறித்து ஒவ்வொரு பாட ஆசிரியரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் உரையாற்றினார்.
மேலும், கங்கை நதி எங்கு உற்பத்தி ஆகிறது என்ற கேள்விக்கு தமிழ் பாட வேளையில் சிவனின் தலையில் என்றும், சமூக அறிவியல் (புவியியல்) பாட வேளையில் இமயமலையில் என்றும் பதில் உள்ளது. இந்த வேறுபாடுகளை உணரும் வகையில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
ஆசிரியர் லதா, “எனக்கு தெரிந்த அம்பேத்கார்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும் பொது 1942இல் தொழிலாளர் நலத்துறையின் வைஸ்ராய் அவையில் 18 மணி வேலையை 8 மணி நேர வேலையாக குறைப்பதற்கு முக்கிய காரணமாக டாக்டர் அம்பேத்கர் அமைந்தார்.
இந்து சட்ட மசோதாவில் பெண் சொத்துரிமை மசோதா, விவாகரத்து செய்துகொள்ளும் உரிமை, சம்பளத்துடன் மகப்பேறு விடுமுறை, சுரங்க தொழிலில் பெண்களை ஈடுபடுத்த கூடாது முதலான உரிமை தொடர்பானவற்றில் அம்பேத்கர் எழுதிய சட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பகுத்தறிவு பாடல்களை பாடினார்.
மாணவ பேச்சாளர் சு.அ.யாழினி, “அம்பேத்காரின் சட்டங்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வும்” என்ற தலைப்பில் பேசினார். முனைவர் ஆ.முத்தமிழ்ச்செல்வன், இணை பேராசிரியர், தகவலியல் துறை, பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சிறப்புரை நிகழ்த்தினார். முனைவர் வீ.அன்புராஜா இறுதியாக லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நன்றியுரை நிகழ்த்தினார்.
தீர்மானங்கள்:
1) டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா (ஏப்ரல் – 14 ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காப்பு நாள் ) நடத்திட பகுத்தறிவாளர் கழகத்திற்கு வழிகாட்டிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
2) இந்தியா அரசியல் அமைப்பு சட்டம், விதி 51 A (H) இன் படி அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, பள்ளி ஆசிரியர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் உரிய பயிற்சியினை அரசு வழங்க வேண்டும்.
3) ஓய்வு பெற்ற நீதிபதி சந்த்ரு அவர்களின் அறிக்கையினை நடைமுறை படுத்தவேண்டும்.
தந்தை பெரியார் குறித்த
பட்டயப் படிப்பு
பட்டயப் படிப்பு
4) பூம்புகார் கடல் ஆய்வு மூலமாக தமிழரின் தொன்மையை கண்டறிய நடவடிக்கையை தமிழ் நாடு தொல்லியல் துறை மூலமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5) தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் குறித்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அறிமுகம் படுத்த வேண்டும்.
6) அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் நலன் காக்கும் விதமாக உளவியல் ஆலோசகர்களை பணி அமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள பட வேண்டும்.
7) பெண்களின் நலன் கருதி பெண்களுக்கு என்று தனி துறை உருவாக்க படவேண்டும்.
8) மகளிர் மட்டுமே கொண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுவது போல அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டு அரசு அலுவலங்களில் ஒவ்வொரு துறையிலும் தனி நிர்வாக அமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.