ஆட்சி ஆதிக்கக்காரன் உங்களை ஆளும்படிக் கடவுள் எங்களை அனுப்பினார் என்கின்றான். மத ஆதிக்கக்காரன் உங்களுக்காக உங்களை மோட்சத்திற்கு அனுப்பக் கடவுள் இந்த மதத்தை ஏற்படுத்தி அதைக் காப்பாற்ற எங்களை அனுப்பினார் என்கின்றான். செல்வ ஆதிக்கக்காரன் முன் ஜென்மத்தில் நான் செய்த புண்ணியத்தினால்தான் இந்தச் செல்வத்தைக் கடவுள் எனக்குக் கொடுத்தார் என்கின்றான். ஆகவே இம்மூன்று கொடியவர்களுக்கும் (மக்களின் விரோதிகளுக்கு) ஆயுதமாக, ஆதாயமாக இருக்கும் கடவுளை நம்புவது காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லுகையில் அதில் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’