பசுப் பாதுகாப்பு பெயரால் மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட கொடூரம்!
புதுடில்லி, ஜூலை 4- பீகார், மாநி லம் சரண் மாவட்டத்தில் கடந்த 27.6.2023 அன்றிரவு மாற்றுத்திறனா ளியான முகமது ஜகிருதீன் என்பவர் பசுப்பாதுகாப்பு என்கிற பெயரால் வன்முறைக் கும்பலால் கொல்லப் பட்ட அதிர்ச்சிகரத் தகவல் வெளி யாகியுள்ளது.
இது தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செய லாளர் முரளிதரன், வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:
மாற்றுத் திறனாளியான ஜகிருதீன் (வயது 55) என்பவர் ஓட்டிவந்த டிரக் சக்கரத்தின் டயர் வெடித்து நடுரோட்டில் நின்றது. அதனை அவர் சரி செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ‘பசுப் பாதுகாப்புப் பிரிவினர்’ என்னும் குண்டர் கும்பல், அவரைக் கொன் றிருக்கிறது. அவர் அந்த சமயத்தில் ஒரு தொழிற்சாலைக்கு மருத்துவப் பயன்பாட்டிற்காக மிருக எலும்பு களை எடுத்துச் சென்று கொண்டி ருந்திருக்கிறார்.
இவ்வாறு மிருகங்களின் எலும் புகளை எடுத்துச்செல்வது கூட இவர்களுக்கு ஒரு ‘குற்றமாக’ மாறியிருக்கிறது. அவ்வாறு எடுத்துச் சென்றவரைக் கொடூரமான முறை யில் கொலை செய்திருக்கிறார்கள்.
இதுபோன்று மாற்றுத்திறனா ளிகள் உள்பட பலர் அவ்வப்போது கொல்லப்படும் நிகழ்வுகள் குறிப் பிட்ட கால இடைவெளியில் வெளி வந்தபோதிலும், அவ்வாறு கொல் லப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளத்தைப் பெற் றிருப்பது மிகவும் ஆபத்தான அறி குறியாகும்.
இதேபோன்றே மனநிலை பாதிக்கப்பட்ட மற்றொரு முஸ்லிம் இளைஞரான முகமுது ஃபையாஸ், பீகார் சமஸ்டிபூரில், குண்டர் கும்ப லால் அடித்தே கொல்லப்பட்டிருக் கிறார்.
இவர்களால் தொடர்ந்து பரப்பப்படும் விஷமப் பிரச்சாரத் தின் விளைவாக, இவர்களின் கொடூரமான தாக்குதல்களுக்கு மாற்றுத் திறனாளிகள்கூட தப்ப வில்லை. இவ்வாறு மதவெறி மற்றும் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பீகார் மாநில அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், வழக்கு முறையாக நடைபெற்று, உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
-இவ்வாறு அதில் கூறியுள்ளார்.