கொச்சி, ஜூலை 4- கேரள சட்டமன்றத்தில நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதப் படுத்தி வருகிறார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக சட்டத் துறையை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
கேரள அரசு ஒன்பது மசோ தாக்களை ஆளுநரிடம் ஒப்புத லுக்காக அனுப்பி வைத் துள்ளது. அவற்றை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். இது நாடாளுமன்ற ஜன நாயக முறைக்கு எதிரானதாகும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன் றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன உச்சநீதிமன்றத்திற்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது.
மீண்டும் அது செயல்படத் தொடங்கியதும் இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல் லப்படும். ஆளுநர் காலவரையறையின்றி மசோதாக்களை வைத்தி ருப்பது மாநில அரசுகள் செயல் படுவதற்கு வகுக்கப்பட்ட அரச மைப்பு கட்டமைப்பை சிதைத்து விடும் என கேரள அரசு நீதி மன்றத்தில் வாதிடும்.
ஆளுநரின் நடவடிக்கை அரசமைப்பின் 200 ஆவது பிரிவுக்கு எதிரானது என்றும் சட்டத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு மசோ தாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையெனில் திருப்பியனுப்ப வேண்டும். அல்லது குடியரசுத் தலை வரின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். இந்த மூன்றில் ஒன்றைத் தான் ஆளுநர் செய்ய வேண்டும். எதையும் செய்யாமல், அரசமைப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் தாமதப்படுத்துகிறார் என்று கேரள அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
நிலுவையில் உள்ள மசோதாக்கள்
12.11.2021 அன்று ஆளு நரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பல்க லைக்கழக சட்டங்கள் (திருத் தம்) மசோதா 2021. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இது நிலுவையில் உள்ளது . மேலும் மார்ச் 3-ஆம் தேதி அனுப்பப்பட்ட கேரள பொது சுகாதார மசோதா 2023. கேரள கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா 2022, கேரள லோக் ஆயுக்தா (திருத்தம்) மசோதா 2022 மற்றும் கேரள தனியார் வன (விருப்பம் மற்றும் ஒதுக்கீடு) திருத்த மசோதா 2023 ஆகியவையும் நிலுவையில் உள்ளன.