திருப்பதி, ஜூலை, 4 செல்பி எடுத்துக் கொண்டும் நன்பர்களிடம் காட்சிப் பதிவு செய்யச்சொல்லியும் உயரமான அருவியிலிருந்து குதித்த சென்னைக்கல்லூரி மாணவர் பாறை இடையில் சிக்கி உயிரிழந்தார் சென்னையில் எம்.எஸ்.சி. படிக்கும் சுமந்த் என்ற மாணவர் நண்பர் களுடன் உல்லாசப் பயணமாக திருப்பதி மாவட்டம் தலகோணா அருவியில் குளிக்க சென்றார். அவர் செல்பி எடுக்க முயலும் போது பாறையில் இருந்து வழுக்கி விழப்பார்த்தார். உடனே சுதா கரித்துக் கொண்டார். அதன் பிறகு அவர் மீண்டும் ஒரு பாறை மீது ஏறி நின்று அருவியின் கீழ் உள்ள குட்டை யில் குதிப்பதை காட்சிப் பதிவாக எடுக்கும்படி நண்பர்களி டம் கூறி மேல் இருந்து குதித்துள்ளார்.
அவ்வாறு சுமந்த் குதித்த பிறகு தண்ணீருக்கு அடியில் உள்ள பாறையில் அவர் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் தண்ணீருக்கு மேலே வராததால் அச்சமடைந்த அவரது நண்பர்கள் எர்ரவாரிபாளையம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தண்ணீருக்குள் இறங்கி தேடியும் கிடைக்காத நிலையில், இருள் சூழ்ந்ததால் விடிந்த பிறகு தீயணைப்பு வீரர்கள் தண் ணீருக்கு அடியில் பாறை இடுக்கில் சிக்கி இருந்த உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டில் இதுபோன்ற நிகழ்வுகளில் மூன்று பேர் இறந்திருப்பது குறிப்பிடத் தக்கது.