101 வயதான நோயாளிக்கு சிக்கலான இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது!

2 Min Read

சென்னை, ஏப். 17– சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூர் பகுதியில் உள்ள பீ வெல் மருத்துவமனையில், பல்வேறு தீவிரமான உடல் நிலை சிக்கல்களுடன் சேர்ந்து  மிகவும் சவாலான மருத்துவ நிலைமையில் வந்த 101 வயதான நோயாளிக்கு வெற்றிகரமாக இடுப்பு மாற்று – ஹெமிஆர்த்ரோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சேலையூர், பீ வெல் மருத்துவ மனையின் மருத்துவத் தலைவர் மற்றும் மூத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் கோபிநாத் துரைசாமி கூறுகையில், “101 வயதான நபருக்கு அறுவை சிகிச்சை செய்வது சாதாரணமாகவே கடினமானது.

ஆனால் இத்தனை உடல்நிலை சிக்கல்களுடன் உள்ள ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்பதே மிகவும் கவனமாகவும் திட்டமிடப்பட்டும் செய்ய வேண்டிய ஒரு செயலாக இருந்தது, இந்த அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகுந்த நுண்ணறிவு தேவைப்பட்டது.

அனஸ்தீசியா, நெஃப்ராலஜி, கார்டியாலஜி, கிரிட்டிக்கல் கேர் மற்றும் ஃபிசியோதெரபி போன்ற துறைகளில் நிபுணர்களைக் கொண்ட மருத்துவ குழு ஒருங்கிணைந்த முறையில் நோயாளியின் சிக்கலான உடல்நிலையை கவனித்து கொண்டனர், அதனால் அறுவை சிகிச்சை, எந்தவொரு சிக்கலுமின்றி வெற்றிகரமாக நடைபெற, ஹெமிஆர்த்ரோபிளாஸ்டி முறை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளி தற்போது அவர் சுய உணர்வுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நோயாளி மீண்டும் நடக்க தொடங்கி உள்ளார்.

முதுமை மற்றும் பிற நோய்கள் குறிப்பிடத்தக்க சவால்களாக இருந்தாலும், சரியான மருத்துவ நிபுணத்துவம் மற்றும் ஒத்துழைப்புடன் அணுகும்போது அவற்றைத் தீர்க்க முடியும் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது” என்றார்.

பீ வெல் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சி.ஜே. வெற்றிவேல், இது குறித்து கூறுகையில், “இந்த நிகழ்வு மருத்துவர்களின் ஒருங்கிணைந்த சேவை மற்றும் நோயாளியின் மய்யமான பராமரிப்பிற்கு மிக அவசியம் என்பதற்கு எடுத்துக்காட்டு,” மற்றும் நோயாளிகளின் வயது நிலையைப் பொருட்படுத்தாமல், சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பான முறையில் அவர்களுக்குத் தேவையான பராமரிப்பை உறுதி செய்வதில் எங்கள் கவனம் உள்ளது” என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண