பறவையைப் பார்த்துப் பறக்க ஆசைப்பட்ட ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பறக்க வைத்த இயந்திரம்தான் விமானம்.
இன்று நடக்கும் விமான விபத்து சம்பவங்களை நீங்கள் அறிந்திருக்கலாம். முதல் முதலில் விமான விபத்து நடந்த சம்பவம் மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அந்த தவறுகளில் இருந்து ரைட் சகோதரர்கள் கற்றுக்கொண்ட பாடம், இன்று அனைவரையும் விமானத்தில் பயணிக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரிந்து கொள்ளவோம்.
செப்டம்பர் 17, 1908 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஃபோர்ட் மியர் மைதானத்தில் முதல் முதலாக விமானம் பறக்க தயாராக இருந்தது. இதனை பார்க்க பலரும் அங்கு ஆரவாரத்துடன் குவிந்திருந்தனர்.
ஆர்வில் மற்றும் வில்பர் ரைட் என்ற சகோதரர்கள் தங்களது கண்டுபிடிப்பான “ரைட் ஃப்ளையர்” என்ற விமானத்தை அமெரிக்க இராணுவத்தின் முன் நிரூபிக்க இருந்தனர்.
இந்த விமானம் எப்படி பறக்கும் என்பதை பார்க்க இராணுவ அதிகாரிகள் மற்றும் மக்கள் ஆர்வமாக இருந்தனர். ஆர்வில் ரைட் விமானத்தை இயக்கினார், அவருடன் அமெரிக்க ராணுவ அதிகாரி தாமஸ் பயணம் செய்தார்.
அவர்கள் திட்டமிட்டபடி விமானமும் புறப்பட்டது. இதனை பார்த்த மக்கள் தங்களது ஆச்சரியத்தை கைதட்டல்களால் வெளிப்படுத்தினர். ஆனால் இந்த விமானம் பறந்த சில மணி நேரத்திலேயே விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தது.
அதாவது “ரைட் ஃப்ளையரில்” இருந்த ஒரு பிளேடு விமானம் பறக்கும் போது கீழே விழுந்தது.
இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக சுற்றத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளானது.
சரித்திரத்தை மாற்றிய `முதல் விபத்து’; விமானத்தை முதல் முறையாக பார்த்த மக்கள்.. என்ன செய்தார்கள்? பேரதிர்ச்சியில் உறைந்தனர்.
முதல் விமான விபத்து சம்பவத்தால் ரைட் சகோதர்கள் துவண்டு போகவில்லை, விமானப் பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பை மேம்படுத்த முயற்சித்தனர். அதன் பின்னர் வெற்றிக்கரமாக பறக்கும் விமானத்தை உருவாக்கினர்.
இந்த விபத்தில் ராணுவ அதிகாரி உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு தான் விமான விபத்தில் பதிவான முதல் உயிரிழப்பு. ஆர்வில்-க்கு பலத்த காயங்கள், பல எலும்பு முறிவுகள் மற்றும் கால் முறிவு ஏற்பட்டன. அவர் மருத்துவமனையில் அனுமதித்ததால் உயிர் தப்பினார்.
இந்த துயர சம்பவம் தான் உலகின் முதல் விமான விபத்து என்று கருதப்படுகிறது. ஆனால் இதனால் அந்த சகோதர்கள் துவண்டு போகவில்லை, விமானப் பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பை மேம்படுத்த முயற்சித்தனர். அதன் பின்னர் வெற்றிக்கரமாக பறக்கும் விமானத்தை உருவாக்கினர் என்பது வரலாறு.
இந்த சகோதர்கள் முதன் முதலில் வடிவமைத்து, பயணம் செய்த அந்த விமானம் வாசிங்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.