1870களில் இது பற்றி ஆங்கில விஞ்ஞானி லார்ட் ரேலீ ஆய்வு செய்தார். சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, அது ஊதா நிறத்திலிருந்து சிவப்பு வரை பல்வேறு வண்ணங்களின் ஒளி அலைகளால் வருகிறது.
குறுகிய அலைநீளம்
ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு அலைநீளம் உள்ளது. அதேசமயம் நீல ஒளி நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு ஒளியுடன் ஒப்பிடும்போது குறுகிய அலைநீளத்தைக் கொண்டுள்ளது.
சூரிய ஒளியில் உள்ள நீல நிறம் மற்ற நிறங்களை விட அதிகமாகச் சிதறுகிறது. காரணம் அது குறுகிய அலைநீளங்களைக் கொண்டுள்ளது.
நீலம் மற்றும் ஊதா போன்ற குறுகிய அலைநீள ஒளி, சிவப்பு மற்றும் ஆரஞ்சு போன்ற நீண்ட அலைநீளங்களை விட மிகவும் திறம்படச் சிதறடிக்கப்படுகிறது. ரேலீயின் கண்டுபிடிப்புகள்படி, நீல ஒளி அதன் குறுகிய அலைநீளத்தால் சிவப்பு ஒளியை விட ஒன்பது மடங்கு அதிகமாகச் சிதறடிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
இதனால் சூரிய ஒளி வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும்போது நீல மற்றும் ஊதா நிறங்கள் வானம் முழுவதும் பரவுகின்றன. ஒளி பரவல் காரணமாக அது நீல நிறத்தில் தோன்றுகிறது.
விண்வெளி நமக்கு கருப்பாகத் தோன்றுவது ஏன்?
விண்வெளியில் வளிமண்டலம் (காற்று) இல்லை. எனவே ஒளி சிதற வாய்ப்புகள் இல்லை. பரந்த விண்வெளியில் சூரிய ஒளியானது காற்று மூலக்கூறுகளின் எந்த குறுக்கீடு இல்லாமல் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது.
எனவே ஒளியே சிதறடிக்க எதுவும் இல்லாததால் அனைத்து வண்ணங்களும் ஒன்றாக இருக்கின்றன. எனவே விண்வெளி நமக்குக் கருப்பாகத் தோன்றுகிறது.